பக்கம் எண் :

14

(க-ரை.) தலையிற்றேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புக்களிற் பூசுதல், அடுத்தவராடையைத் தீண்டுதல் முதலியன செய்தலாகாது.

எண்ணெய் : எள் + நெய். மாசுணி : மாசு + உணி : மாசு - அழுக்கு, உணி - உண்ணப்பட்டது; உண் : பகுதி இ : செயப்படுபொருள் விகுதி. குறை - முடிக்கப்படுங் கருமம். இஃது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

(12)
சய்யத்தகாதன

நீருள் நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக்
கீறார் இராமரமுஞ் சேரார் இடரெனினும்
நீர்தொடா தெண்ணெ யுரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.

(இ-ள்.) நீருள் - நீரின்கண், நிழல் புரிந்து - தம் நிழலை விரும்பி, நோக்கார் - பாரார், நிலம் - நிலத்தை, இரா - இருந்து, கீறார் - கீறமாட்டார், இரா - இரவில், மரமும் - ஒரு மரத்தின் கண்ணும், சேரார் - சேர்ந்திரார், இடர் எனினும் - நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும், நீர் தொடாதே - நீரைத் தொடாமலே, எண்ணெய் - எண்ணெயை, உரையார் - உடம்பின்கண் தேயார், உரைத்தபின் - அவ்வெண்ணெய் தேய்த்த பின், நீர் தொடார் - தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது, புலை - புலையை. நோக்கார் - தம் கண்ணால் நோக்கார்.

(ப. பொ-ரை.) நீரின்கண் தம் நிழலை விரும்பி நோக்கார். நிலத்தை இருந்து கீறார், இரவின்கண் ஒரு மரத்தின் கண்ணும் சேரார், நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே எண்ணெய் உடம்பின்கண் தேயார், அவ்வெண்ணெயைத் தேய்த்தபின் தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தம் கண்ணால் நோக்கார்.

(க-ரை.) தண்ணீரில் நிழல் பார்த்தல், சும்மா தரையைக் கீறுதல் முதலியன ஆகா.

நிழல் - உடம்பு நிழல், புரிதல் - விரும்பல். முதல் இரா - இருந்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இரண்டாவது இரா - இரவு. புலை - கீழ்மகன்; பண்பாகு பெயர். தண்ணீரில் நிழலை நோக்குதல் செல்வக் கேடாதலின் ‘நீருள் நிழற்புரிந்து நோக்கார்' என்றார். நிலத்திற் கீறுதல் தோற்றார் செய்யுங்குறி. மரங்கள் பகலில் உட்கொண்ட கெட்ட காற்றை