(ப. பொ-ரை.) முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லைக் கடந்து ஒன்றினையுஞ் செய்யார், முடியாது கிடந்த குறை விரதமுடையார் மிகவதனை மறந்தொழுகார், மதி நிறைந்த உவாவின் கண் தம் பல் துடைப்பதும் செய்யார், அவ்வுவாவின் கண் மரங்களையுங் குறையார் என்று சொல்லப்படுவது நல்லறிவாளர் தொழில். (க-ரை.) குரவர் சொற்கடந்து செய்தல், நிறையுவாவில் பல் துடைத்தல், மரங்குறைத்தல் முதலியவற்றைச் செய்யார் நல்லறிவாளர். உவா - பூரணை : நிறையுவா, மறையுவா - அமாவாசை. இகந்து : இக : பகுதி, மென்கோல் தின்னல் - கொம்பாற் பல் துடைத்தல். (17) உணவுகொள் முறைமைநீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார் உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக் கொண்டா ரரக்கர் குறித்து. (இ-ள்.) நீர் ஆடி - குளித்து, கால் கழுவி - காலைக் கழுவி, வாய்பூசி - வாயைத் துடைத்து, மண்டலம் செய்து - உண்கலந்தைச் சுற்றி நீரிறைத்து, உண்டார் - உண்டவர். உண்டார் எனப்படுவர் - உண்டாராவர், அல்லாதார் - இப்படிச் செய்யாமல் உண்டவர், உண்டார் போல் - உண்டாரைப்போல, வாய் பூசி - வாயைக் கழுவி, செல்வர் - போவார், அது - அவருண்பதை, அரக்கர் - அசுரர், குறித்து வெறுத்து எடுத்துக்கொண்டார் - கருதிச் சினந்து எடுத்துக்கொள்வார். (ப. பொ-ரை.) குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணுமிடம் மண்டலஞ் செய்து உண்டார் உண்டாராவர். இப்படிச் செய்யாமல் உண்டவர்கள் உண்டாரைப்போல வாய்பூசிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொண்டார். (க-ரை.) உண்கலத்தினின்றும் உணவை யெடுத்துண்ணு முன் நீராடல் கால் கழுவல் முதலியன செய்துண்பதே, உண்பதாம். மண்டலம் - வட்டம். மண்டலஞ் செய்தலாவது - உண்ணுமுன் மறைமுறையில் மந்திரங்கூறி நீர்வலஞ் செய்தல்; "அரு
|