(க-ரை.) படுக்கும்பொழுது கடவுளைத் தொழுது, வடக்கும் கோணத்திசையும் தலைவையாது,போர்த்துப்படுத்தல் முறை. கூப்பி : வினையெச்சம், கூப்பு : பகுதி. கோணத்திசை - வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய நான்குமாம். இச்செய்யுள்வரை நித்தியக் கருமமுறை சொல்லப்பட்டது. கோள் : முதனிலைதிரிந்த தொழிலாகுயெர். மீ - மேல். (30) ஊடறுத்துச் செல்லாமைஇருதேவர் பார்ப்பா ரிடைபோகார் தும்மினும் மிக்கார் வழுத்திற் றொழுதெழுக ஒப்பார்க் குடன்செல்ல லுள்ள முவந்து. (இ-ள்.) இருதேவர் (இடை) - இரண்டு தெய்வங்களுக்கு இடையிலும், பார்ப்பார் இடை - பார்ப்பார் இடையினும், போகார் - போகமாட்டார், தும்மினும் - (தாம் போகும் போது) ஒருவர் தும்மினாலும், மிக்கார் வழுத்தின் - பெரியார் வாழ்த்தினால், தொழுது எழுக - அவரைத் தொழுது செல்ல வேண்டும், ஒப்பார்க்கு - தாம் புறப்படுகையில் தம்மோடொத்த நண்பர் எதிர்ப்பட்டால், உள்ளம் உவந்து - மனம் மகிழ்ந்து, உடன் செல்லல் - நேரே போக. (ப. பொ-ரை.) இருதேவர் நடுவும் பார்ப்பார் பலர் நடுவும் ஊடறுத்துப்போகார்; தும்மினபொழுது மிக்கார் வழுத்தினால் தொழுதெழுக; தம்மோடொப்பார்க்கு வழிபோம் பொழுது உடனே நேர் செல்க, தம்முள்ளம் உவந்து. (க-ரை.) இரண்டு தெய்வங்களுக்கும் பார்ப்பாருக்கும் இடையில் செல்லக்கூடாது. தும்மினபொழுது பெரியோர் வாழ்த்தினால் அவரைத் தொழுக. ஒத்த நண்பன் எதிர் வருவானானால் உடன் செல்க. ‘மிக்கார் வழுத்தி' என்ற பாடமாயின் பெரியாரைத் தொழுது கொண்டு என்றுரைக்க. பெரியோர் கூடியிருக்கும் மன்றின் நடுவில் ஊடறுத்துப் போகலாகாது என்பது "என்றூடறுத்துச் சென்றாலும் மன்றூடறுத்துச் செல்லற்க" என்ற பழமொழியாலும் விளங்கும். உடன் செல்லல் - நேராகச் செல்க. செல்லல் : உடன்பாட்டு வியங்கோள். (31)
|