பக்கம் எண் :

7
தக்கணை முதலிய தவறாது நடத்தல்

தக்கணை வேள்வி தவங்கல்வி யிந்நான்கும்
முப்பா லொழுக்கினாற் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலு மாகா கெடும்.

(இ-ள்.) தக்கணை - ஆசியர்க்குத் தட்சணை கொடுத்தலும், வேள்வி - யாகம் பண்ணுதலும், தவம் - தவஞ்செய்தலும். கல்வி - கல்வியும், இந்நான்கும் - என இந்நான்கினையும். முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க - மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு காத்துச் செய்து வருக, உய்க்காக்கால் - ஒருநெறியிற் செலுத்தாவிடின், எப்பாலும் - எவ்வுலகத்தின் கண்ணும், ஆகா கெடும் - பயனாகாவாய்க் கெடும்.

(ப. பொ-ரை.) குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின்கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும்.

(க-ரை.) தக்கணை முதலியவைகளைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்கவேண்டும்.

முப்பால் மூன்று இடங்கள் : மனம், மொழி, மெய் என்பன. பால் : இடம். வேள்வி : வி விகுதிபெற்ற தொழிற்பெயர். உய்க்க : விகுதிபெற்ற வியங்கோள் : உய்க்காக்கால் : எதிர்மறை வினையெச்சம். இஃது இன்னிசைச் சிந்தியல் வெண்பா, மூன்றடியால் வந்தமையின்.

வேண்டிய வீரடி யார்குற ளாமிக்க மூவடியாற்
றூண்டிய சிந்தியல் நான்கடி நேரிசை தொக்கதனில
நீண்டியல் பாதத்துப் பஃறொடையாம்"


என்பது விதி.

(3)

வைகறையிற் செய்யவேண்டியவை

வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.