(இ-ள்.) இளம் கிளைஞர் - தமக்குப் புதிய சுற்றத்தார், உண்ணும் இடத்து - சாப்பிடும்பொழுது, குரவர் - பெரியோர், உயர்ந்ததன்மேல் இரார் -, உள் அழிவு செய்யார் - மனமழிவனவற்றையுஞ் செய்யார்; இறந்து - முறைமை கடந்து. இன்னா - இன்னாதனவற்றை, செய்தக் கடைத்தும் - அப்புதிய கிளைஞர் செய்த காலத்தும். (ப. பொ-ரை.) புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணுமிடத்துக் குரவராயினார் உயர்ந்ததன் மேலிரார். இளங்கிளைஞர் மனமழிவனவற்றையும் செய்யார், முறைமை கடந்து மற்றவ் விளங்கிளைஞர் இன்னாத செய்த காலத்தும். (க-ரை.) புதிய உறவினர்கள் உண்ணுமிடத்துப் பெரியோர் உயர்ந்த பீடத்திலிருத்தலும், அவர்கள் மனம் நோகும்படி ஏதாவது செய்தலும் ஆகா. உள்ளழிவு - உள்ளழிதற்குக் காரணமாவது. ‘இளங்கிளைகள்' என்றும் பாடம். இறந்து - இற : பகுதி; கட. இன்னா : எதிர்மறைப் பலவின்பாற் பெயர். செய்தக் கடை - விணையெச்சம். கிளைஞர் - ஞ் : பெயரிடை நிலை. (40) நுண்ணிய நூலறிவினார் செயல்கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார் புண்ணிய மாய தலையோ டுறுப்புறுத்த நுண்ணிய நூலறிவி னார். (இ-ள்.) கண் எச்சில் - ஒருவன்தன் கண்ணிற்கு மருந்தெழுதிய கோல்கொண்டு, கண் ஊட்டார் - அவ்வெச்சில் கழியாது, தம் கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார், காலொடு கால் தங்காலோடு காலை, தேயார் - தேய்க்கமாட்டார். புண்ணியமாய புண்ணியமான பொருள்களை, தலையோடு - தலையுடன், உறுப்பு - மற்ற உறுப்பின்கண்ணும், உறுத்த - உறுத்துக, நுண்ணிய - நுட்பமான, நூல் அறிவினார் - நூலை யுணர்வார். (ப. பொ-ரை.) ஒருவன் தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோல்கொண்டு அவ்வெச்சில் கழியாது தங்கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார், தங் காலோடு கால் தேயார், புண்ணிய மாய பொருள்களைத் தம் தலையின்கண்ணும் மற்றை உறுப்பின் கண்ணும் உறுத்துக; நுண்ணிய நூலை யுணர்வார். (க-ரை.) ஒருவர் கண்ணெழுதிய கோலைச் சுத்தம் செய்யாமல் பிறர் கண்ணிற் செலுத்தக்கூடாது. காலொடு கால்
|