தேய்க்கலாகாது. புனிதமான பொருள் கிடைத்தால் அதனைத் தலையிலும் கண் முதலிய உறுப்புக்களிலும் ஒற்றிக்கொள்க. கண்ணெச்சில் - கண்ணின் எச்சில் : ஆறாம் வேற்றுமைத்தொகை. உறுத்த : அகரவீற்று வியங்கோள், "நுண்ணிய நூலுணர்வினார்" என்றும் பாடம். ஊட்டல் - எழுதுதல். ஆய : ஆகியஎன்பதன் விகாரம்; யகரவொற்று இறந்தகால இடைநிலை. (41) மனைவியை நீங்கியிருக்குங் காலமும் நீங்காதுறையுங் காலமும்தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின் ஈராறு நாளும் இகவற்க என்பதே பேரறி வாளர் துணிவு. (இ-ள்.) தீண்டா (தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால்) மெய்யுறலாகாத, முந்நாள் - நாள் மூன்றின் கண்ணும், நோக்கார் - அவரை நோக்கார், நீராடியபின் - தலைமுழுகின பின், ஈர் ஆறு நாளும் - பன்னிரண்டு நாள் அளவும், இகவற்க - அகலா தொழிக, என்பது - என்று சொல்லப்படுவது, பேரறிவாளர் - மிக்க ஆராய்ச்சியாளர், துணிவு - கொள்கை. (ப. பொ-ரை.) தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால், மெய்யுறலாகாத நாள் மூன்றின்கண்ணும் அவரை நோக்கார், நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் அகலாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு. (க-ரை.) மனைவியர்க்கு மாதப்பூப்பு நிகழ்ந்தால் மூன்று நாளளவும், அவர் முகத்தைக் கணவன் காணலாகாது. மூன்று நாளுங்கழிந்து தலைமுழுகினபின் பன்னிரண்டு நாளளவும் அவரைப் பிரிதலாகாது. தீண்டா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். முந்நாள் - மூன்று + நாள். ஈராறு - இரண்டு +ஆறு. இகவற்க : எதிர்மறை வியங்கோள். "பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான" என்பது தொல்காப்பியம் பொருள் . கற்பியல் 46 ஆம் சூத்திரம். அஃதாவது, பூப்புத் தோன்றிய மூன்று நாளும் கூட்ட
|