பக்கம் எண் :

37

மின்றி அணுக இருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளும் கூடியுறைக என்றதாம். பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளுங் கருத் தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்றாநாள் தங்கில் அது சில்வாழ்க்கைத்தாதலும் பற்றி முந்நாளும் கூட்டமின்றி என்றார். கூட்டமின்றியும் நீங்காதிருத்தலின் பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தம் அகலும், அகலவே, அக் கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பேற்றுக் காலத்துக்குரிய நிலைமை கூறிற்று.

இலக்கண விளக்க வாசிரியர் வைத்தியநாத நாவலரும் அகத்திணையியல் 87 ஆம் சூத்திரமாக,

"பூத்த காலைப் புனையிழை மனைவியை
நீரா டியபின் ஈராறு நாளும்,
கருவயிற் றுறூஉங் கால மாதலின்,
பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்"

என்றனர்.

(42)

உடனுறைவுக்காகாக் காலம்

உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.

(இ-ள்.) உச்சி அம் போழ்தோடு - உச்சியம் பொழுதும், இடை யாமம் - நடுக்கங்குலும், ஈர் அந்தி - மாலையும் காலையும், மிக்க இரு தேவர் நாளோடு - பெருமை மிகுந்த சிவன் விட்ணு ஆகிய இரு தேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாத்திதி நாள் - உவாவும், அட்டமியும் - அட்டமியும், ஏனை பிறந்த நாள் - தாம் பிறந்த நாளும், இ அனைத்தும் - இந்நாட்களின்கண், உடன் உறைவின்கண் - தம் மனைவியரோடு சேர்ந்திருக்க, ஒட்டார் - நல்லோர் உடன்படார்.

(ப. பொ-ரை.) உச்சியம்பொழுதும், நடுக் கங்குலும், மாலையுங் காலையும், மிக்க இருதேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாவும், அட்டமியும், தாம் பிறந்த நாளும் என இந்நாட்களின்கண் தம் மனைவியரோடு உடனுறைதலின்கண் நல்லோர் உடன்படார்.