பக்கம் எண் :

39
பந்தலிற் பரப்பத் தகாதவை

துடைப்பந் துகட்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலங் கட்டில் கிழிந்ததனோ டைந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.

(இ-ள்.) துடைப்பம் - பெருக்குமாறும், துகள் காடு - துகளோடு கூடிய செத்தையும், புல் இதழ் - பூவின் புறவிதழும், செத்தல் - பழமையான, கரு கலம் - கரிச்சட்டியும், கிழிந்த கட்டில் அதனோடு - கிழிந்த கட்டிலும், ஐந்தும் - ஆகிய இவ்வைந்தையும் பந்தர் அகத்து - மணப்பந்தலின்கீழ், பரப்பற்க - பரப்பா தொழிக.

(ப. பொ-ரை.) துரால் சீக்குந் துடைப்பமும், துகளோடு கூடிய துராலும், பூவின் புறவிதழும், பழங் கருங்கலங்களும், கிழிந்த கட்டிலும் என இவ்வைந்தும் மணப்பந்தரின் கீழ்ப்பரப்பா தொழிக.

(க-ரை.) திருமணப்பந்தலின்கீழ்த் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழங் கரிப்பானை. கிழிந்த கட்டில் என்னுமிவைகளைப் பரப்பலாகாது.

துரால் - செத்தை. செத்தல் - பசுமையற்றது; பழைமை, புல்லிதழ் - மலரின் மேற்புறத்துள்ள இதழ்; புறவிதழ், அகவிதழ், அல்லியெனப்படும். பந்தல் - பந்தர் : ஈற்றுப்போலி.

(45)

இல்லம் பேணும் முறை

காட்டுக் களைந்து கலங்கழீஇ யில்லத்தை
ஆப்பிநீ ரெங்குந் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்
தில்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்ல துறல்வேண்டு வார்.

(இ-ள்.) நல்லது உறல் - நன்மை யடைதலை, வேண்டுவார் - விரும்புவார், சிறுகாலை - அதிகாலை துயில் எழுந்து, இல்லம் - வீடு, பொலிய - விளங்கும்படி, காடு களைந்து - செத்தைகளைப் போக்கி, கலம் கழிஇ - கருங்கலங்களைக் கழுவி, ஆப்பி நீர் - ஆப்பி நீராலே, இல்லத்தை எங்கும் - தம் மனை யெங்கும், தெளித்து -, நீர்ச்சால் - நீர் நிறைக்கும் சாலையும், கரகம் - கரகங்