(க-ரை.) அட்டமி அமாவாசை பௌர்ணமி சதுர்த்தசி அரசர்க் குறுகண்வேளை பூகம்பம் இடிமுழக்கம் தூய்மையின்மை என்னு மிவை வேதமோதலாகாக நாட்கள். அ. சிறப்புப்பற்றி வந்த சுட்டு. இது பண்டறி சுட்டு, உலகறி சுட்டு என்றும் வழங்கப்பெறும். உறுகண் - கலக்க மடைந்த கண்; கலக்கமடைதல், துன்பமுண்டாயின இடத்தாதலால் உறுகண் துன்பம் எனப்பட்டது. வேதம் என்று மழியாது ஒரு தன்மையதாயிருப்பதால், இலங்குநூல் எனப்பட்டது. அதிர்ப்பு : தொழிற்பெயர். இச்செய்யுட்பொருள் அடியில் வருங் காசிகண்டச் செய்யுளில் அமைந்திருத்த லறிக. "உருமுமண் வாரி யுற்கைவீழ்ந் திடுநாள் சுழல்வளி யுற்றநா ளோர்ப்ப எரிபடு நாளி லரையிருட் போதிற் பின்னவ ரிருந்திடு மிடத்தில் அரசருக் கிடையூ றுற்றுழி யவர்கட் கசுபம்வந் துற்றிடு நாளில் மருவிய பதினான் கீருவா நந்தை அட்டமி யோதல்மாண் பன்றே." (47) பெருங்சோ றளிக்குங் காலம்கலியாணந் தேவர் பிதிர்விழா வேள்வியென் றைவகை நாளும் இகழா தறஞ்செய்க பெய்க விருந்திற்குங் கூழ். (இ-ள்.) கலியாணம் நாள் - தான் செய்யுங் கலியாண நாளின்கண்ணும், தேவர் (நாள்) - தேவர்கட்குச் சிறப்பு நாளின் கண்ணும், பிதிர்நாள் - பிதிரர்கட்குச் சிறப்புச் செய்யும் நாளின் கண்ணும், விழா நாள் - விழா நாளின்கண்ணும், வேள்வி நாள் - வேள்ளி செய்யும் நாளின்கண்ணும், என்ற ஐவகை நாளும் - என்ற ஐவகைப்பட்ட காலத்தும், இகழாது - இகழாதே, அறம் செய்க - கொடையறஞ் செய்க, விருந்திற்கும் - விருந்தினர்க்கும், கூழ் பெய்க - சோறிடுக. (ப. பொ-ரை.) தான் செய்யும் கலியாண நாளின்கண்ணும், தேவர்க்குரிய சிறப்புநாளின்கண்ணும், பிதிர்கட்குச் சிறப்புச்செய்யும் நாளின்கண்ணும், விழாநாளின்கண்ணும்
|