பக்கம் எண் :

45
நெறிப்பட்டார் பயிலாதன

தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தங் கதங்கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.

(இ-ள்.) நெறிப்பட்டவர் - ஒழுக்கமுடையோர். தெறியொடு - தெறித்தலும், கல் ஏறு - கல் எறிதலும், வீளை - கனைத்தல் முதலியன செய்தலும், விளியே - அழைத்தலும், விகிர்தம் - ஒருவன் செய்வதுபோலத் தாமும் அவனை யிகழ்ந்து செய்தலும், கதம் - கோபமும், கரத்தல் - ஒளித்தலும், கை புடை - கை தட்டலும். தோன்ற - பிறர்க்கு வெளிப்படும்படி, உறுப்பு செகுத்தலோடு - தன் உறுப்புக்களை அழித்தலும், இன்னவை எல்லாம் - ஆகிய இவற்றையெல்லாம். பயிற்றார் - பழகிச் செய்யார்.

(ப. பொ-ரை.) தெறித்தலும் கல்லெறிதலும், வீளைசெய்தலும், தூரப்போகின்றா னொருவனை அழைத்தலும், ஒருவன் செய்கையும் சொல்லும் முதலாயினவற்றைத் தாமும் அவ்வகை இகழ்ந்து செய்து காட்டலும், வேகமுடையனாதலும், ஒளித்தலும், கையொடு கை புடைத்தலும், பிறர்க்கு வெளிப்படக் கண்ணிடுதல் முதலாயின செய்து தன்னுறுப்பைச் செகுத்தலும். இப்பெற்றிப் பட்டவையெல்லாம் பயின்று செய்யார் வழிப்பட்டார்

(க-ரை.) ஒரு பொருளை விசிறி யெறிதல் கல்லெறிதல் முதலிய தீய பழக்கங்களைச் செய்யலாகாது.

பயிற்றார் : பயிற்று என்னும் பிறவினைப் பகுதியடியாகப் பிறந்த எதிர்மறைப் பலர்பால் வினைமுற்று, செகுத்தல் - அழித்தல்; செகு : பகுதி. ஏறு : எறி என்பதன் விகாரம்.

(53)

விருந்தினர்க்கு ஊணொடு செய்யுஞ் சிறப்பு

முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய்
கிடக்கையோ டிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்
கூணொடு செய்யுஞ் சிறப்பு.

(இ-ள்.) தலை - தம்மிடத்து. சென்றார்க்கு - வரும் நண்பர் முதலாயினார்க்கு, ஊண் ஒடு - உணவளித்தலோடு, செய்யும்