(இ-ள்.) முளி புல்லும் - முற்றிய புல்லினிடத்தும், (முளி) கானமும் - முற்றிய காட்டினிடத்தும், சேரார் - சேர்ந்திரார், தீக்கு ஊட்டார் - (அவற்றை) நெருப்புக்கு உணவாகச் செய்யார், துளி வீழ - மழை பெய்கையில், கால் பரப்பி - காலைப் பரப்பி வைத்து, ஓடார் - ஓடமாட்டார், தெளிவு இலா - தமக்குத் தெளிவில்லாத, கானம் - காட்டில், தமியர் - தனியராக, இயங்கார் - சஞ்சரியார், துளி அஃகி - மழை குறைந்ததனால், நல்குரவு - வறுமையானது, ஆற்ற - மிகுதியாக, பெருகினும் - பெருகினாலும், தொல் வரவின் - தொன்றுதொட்டு வந்த தமது குலநெறியினின்றும், தீர்ந்த : தொழில் - நீங்கிய செய்கையை, செய்யார் - (அறிவுடையோர்) செய்யமாட்டார். (ப. பொ-ரை.) முற்றிய புல்லின்கண்ணும், முற்றிய காட்டின்கண்ணும் சேர்ந்திரார்; அவற்றைத் தீக்கு உணவாக ஊட்டார்; மழை பெய்யாநிற்கக் காலைப்பரப்பி ஓடார்; தேறமுடியாத காட்டுள் தமியராய்ப் போகார்; மழை குறைந்து பெய்யா தொழிதலால் வறுமை மிகப் பெரிதாயிற்றாயினும், தங்குடி யொழுக்கத்தை நீங்கிய தொழில்களைச் செய்யார். (க-ரை.) உலர்ந்த புற்றரையிலும் முதிர்ந்த காட்டிலும் தங்குதலும், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துதலும், மழை பெய்கையில் காலைப் பரப்பி யோடுதலும்; வழிதுறை தெரியாத காட்டில் தனியாகப் போதலும்; வறுமை வந்த காலத்து நல்லொழுக்கந் தவறுதலும் தகாத காரியங்களாம். அஃகி - அஃக என்னும் காரணப்பொருளில்வந்த செயவெனெச்சத் திரிபு. பெருகினும் - உம் : இழிவு சிறப்பு. நல்குரவு - நல்கு உரவு. நல்குதலாகிய வல்லமை இங்குக் கொடுக்கும் ஆற்றலில்லாத வறுமையைக் குறித்தது; எதிர்மறை யிலக்கணை. (56) நோய் வேண்டாதார் செய்யலாகாதவைபாழ்மனையுந் தேவ குலனுஞ் சுடுகாடும் ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந் தாமே தமியர் புகாஅர் பகல்வளரார் நோயின்மை வேண்டு பவர். (இ-ள்.) நோய் இன்மை வேண்டுபவர் - பிணியில்லா திருத்தலை விரும்புவோர், பாழ் மனையும் - பாழான வீட்டினுள்ளும், தேவ குலனும் - கோயில்களுக்குள்ளும், சுடு காடும் - சுடு
|