(க-ரை.) ஒருவர் எழுந்து போம்பொழுது அவரை அழைத்தல், எங்கே போகிறீர் என்று கேட்டல் செய்யலாகாது, பெரியோர் பக்கம் நின்று பேசுக, வலங்கொண்டு போக. கூவார் - கூ : பகுதி. தும்மார் - தும்மு : பகுதி, சேறீர் - செல் : பகுதி, த் : எழுத்துப்பேறு, ஈர் : முன்னிலைப் பன்மை விகுதி, தகரம் றகரமாயிற்று, கொள்வர் என்பதை இடைநிலைத் தீவகமாகவுங் கூறலாம். (58) தீயவொழுக்கங்கள் சிலஉடம்புநன் றென்றுரையார் ஊதார் விளக்கும் அடுப்பினுள் தீநந்தக் கொள்ளா ரதனைப் படக்காயார் தம்மேற் குறித்து. (இ-ள்.) (ஒருவரைப் பார்த்து) உடம்பு - உமது உடல், நன்று என்று - நன்றாயிருக்கிறதென்று, உரையார் - சொல்லார், விளக்கும் ஊதார் - விளக்கையும் ஊதி அவியார், அடுப்பினுள் தீ - (ஒருபொருள் வெந்து கொண்டிருக்கும்போது) அடுப்பிலுள்ள நெருப்பை, நந்த - அவியும்படி, கொள்ளார் - எடுக்க மாட்டார், தம்மேல் பட - அந்நெருப்பின் சுடர் தம் மேலே படும்படி, குறித்து - (குளிர்கெட) நினைந்து, அதனைக் காயார் - அந்நெருப்பினிடத்து இருந்து குளிர் காயார். (ப. பொ-ரை.) பிறரைப் பார்த்து உமது உடம்பு நன்றாயிருக்கிறது என்று சொல்லார், விளக்கினை வாயால் ஊதி யவியார், அட்டிலடுப்பின்கண் நெருப்பவியச் செய்யார், அந்நெருப்பின் சுடர் தம் மேற்படக் குளிர்கெடக் காயார். (க-ரை.) ஒருவருடம்பு நன்றாயிருக்கிற தென்பதும், விளக்கை வாயாலூதல், ஒருபொருள் வேகும்போது அடுப்பு நெருப்பை அவித்தல் முதலியவையும் தீயொழுக்கங்களாம். நந்தல் - வளர்தல், கெடுதல் : இங்குக் கெடுதலாம். (59) பெரியோருடன் செல்லும்பொழுது செய்யத்தகாதனயாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்மோடங் கோராறு செல்லு மிடத்து. (இ-ள்.) ஆன்று - (அறிவால்) மிகுந்து, அவிந்த - அமைதியடைந்த, மூத்த - ஒழுக்கத்தாலும் ஆண்டாலு முதிர்ந்த, விழுமி
|