எச்சிலுடன் தீண்டலாகாதவை எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோ டிவையென்ப யாவருந் (இ-ள்.) பசு பார்ப்பார் தீ தேவர் உச்சந்தலையோடு இவை - பசு பார்ப்பார் நெருப்பு தேவர் உச்சந்தலை ஆகிய இவற்றை, எச்சிலார் - எச்சிலையுடையராய், யாவரும் தீண்டார் என்ப - யாவரும் தீண்டார் என்று சொல்வர், திட்பத்தால் - யாப்புற, தீண்டாப்பொருள் - எல்லோரும் எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை. (ப. பொ-ரை.) பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லோரும் யாப்புற எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை. (க-ரை.) பசு முதலிய ஐந்து பொருள்களை எவரும் எச்சிலுடன் தீண்டலாகாது. திணைவிரவி எண்ணும் பன்மைபற்றி அஃறிணை முடிபேற்றது. யாப்பு - உறுதி. "அழலையந் தணரைப் பசுவினை மிச்சில் அடைந்துளோர் தீண்டிட லாகா" - காசிகண்டம், "தெய்வம்"என்றும், "உச்சந்தலையோடியாவதும்" என்றும்பாடம், தீண்டார் என்பதில் ஆகார எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது. (5) எச்சிலுடனே காணலாகாதவைஎச்சிலார் நோக்கார் புலைதிங்க ணாயிறுநாய் தக்கவீழ் மீனோடே யிவ்வைந்துந் தெற்றென நன்கறிவார் நாளும் விரைந்து. (இ-ள்.) புலை - புலையும், திங்கள் - மதியும் (சந்திரனும்), நாயிறு - சூரியனும், நாய் - நாயும், தக்க - அழகிய, வீழ் மீனோடு - வீழ்மீனுடன், இவ் ஐந்தும் - சொல்லப்பட்ட இவ்வைந்தினையும், நன்கறிவார் - நன்மையானவற்றை அறிந்துள்ளவர், எச்சிலார் - எச்சிலையுடையவராய், நாளும் - எந்நாளும், விரைந்து - விரைவாய், தெற்றென - தெளிய, நோக்கார் - கண்ணால் நோக்கமாட்டார். (ப. பொ-ரை.) புலையும் திங்களும் நாயிறும் நாயும் அழகிய வீழ்மீனோடு சொல்லப்பட்ட ஐந்தினையும் எச்சிலை
|