பக்கம் எண் :

63
குலமாதர் செய்கை

தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி யாயினும் நோக்கார் தலைமகன்
தன்மேனி யல்லாற் பிற.

(இ-ள்.) (குலமாதர்) தன் தலைமகன் - தம் கணவரது. மேனி - உடல் வடிவத்தை, அல்லால் - அன்றி, பிற எ மேனி ஆயினும் - வேறு ஆடவர் உடல் எத்துணை அழகுடையதாயினும், நோக்கார் - பாரார், தம் மேனி - தமதுடம்பழகை. நோக்கார் - பார்த்துக்கொள்ளார். தலை உளரார் - தலை மயிரைக் கோதார். கை நொடியார் - கையை நொடித்தல் முதலியன செய்யார்.

(ப. பொ-ரை.) நற்குலப் பெண்டிர் தம் கணவரது உடலின் வடிவத்தையன்றி ஏனை ஆடவரது மேனி எத்துணை அழகுடையவேனும் பாரார்; தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலை மயிரைக் கோதார்; கைந்நொடித்தல் முதலியன செய்யார்,

(க-ரை.) குலமாதர் தம் கணவருடல் வடிவையன்றிப் பிறர் வடிவழகு காண வொருப்படார். தலைமயிர் கோதல் கைந்நொடித்தல் முதலிய தீப்பழக்கங்களுங் கொள்ளார்.

தலை - கூந்தலுக்கு : இடவாகுபெயர். கை + நொடி என்பது "தனி ஐ நொதுமுன் மெலி மிகலும்" என்ற விதிப்படி நகரம் மிக்கது. தலைமகன் - தனித்தனி ஒவ்வொருவரைக் குறிக்க வந்த ஒருமை, அதற்கேற்பத் தன் என்றுங் கூறப்பட்டது. உளர்தல் - தடவுதல்.

(77)

அரசவையிற் செய்யலாகாதவை

பிறரொடு மந்திரங் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரிற் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.

(இ-ள்.) பிறரொடு - மற்றவருடன் (இருந்து எதையும்) மந்திரங்கொள்ளார் - மறைவாக ஆராயார், இறைவனை - அரசனை, சாரார் - சாரநில்லார். செவி ஓரார் - (அரசன் பிறருக்குச்) சொல்வனவற்றை) காது கொடுத்துக் கேளார், சாரின் - நிற்க