யுடையார் விரைந்து தெளிய நாளும் கண்ணால் நோக்கார் நன்கறிவார். (க-ரை.) நன்கறிவார் புலை முதலிய ஐந்தையும் கண்ணாற் காணார். புலை - புலையவன். நாயிறு - சூரியன். வீழ்மீன் - எரிநாள் விண்ணினின்றும் வீழும் மீன். மின்னுவது மீன். (6) நால்வகை எச்சிலஎச்சில் பலவு முளமற் றவற்றுள் இயக்க மிரண்டு மிணைவிழைச்சு வாயில் விழைச்சிவை எச்சிலிந் நான்கு (இ-ள்.) எச்சில் சில் பலவும் உள - எச்சில்கள் பலவகை யுள, அவற்றுள் - அவைகளுள், இயக்கம் இரண்டும் - மல மூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடுகூட, இணை விழைச்சு - இணை விழைச்சும், வாயில் விழைச்சு - வாயினால் வழங்கிய விழைச்சும், இவை எச்சில் - என இவை எச்சிலாவன; இ நான்கு - இவ்வெச்சில் நான்கையும் பாதுகாக்க. (ப. பொ-ரை.) எச்சில்கள் பல உள. அவற்றுள் மல மூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடு கூட இணைவிழைச்சும் வாயினால் வழங்கிய விழைச்சும் ஆகிய இவ்வெச்சில் நான்கினையும் பாதுகாக்க. (க-ரை.) பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க. மற்று : அசை. இயக்கம் : அம் ஈற்றுத் தொழிற்பெயர். விழைச்சு - விருப்பம். இணைவிழைச்சு - புணர்ச்சி. (7) எச்சிலுடன் செய்யத்தகாதவைநால்வகை யெச்சிலும் நன்கு கடைப்பிடித் தோதா ருரையார் வளராரே யெஞ்ஞான்றும் மேதைக ளாகுறு வார். (இ-ள்.) நால்வகை எச்சிலும் - மேற்கூறப்பட்ட நான்குஎச்சிைஎச்சிலையும், நன்கு கடைப்பிடித்து - மிகக் கடைப்பிடித்து.ஓதார் - ஒன்றனையும் ஓதார், உரையார் - வாயால் ஒன்றனையுஞ்சொல்லார், வளரார் - கண் துயிலார், எ ஞான்றும் -எக்காலத்தும், மேதைகள் ஆகுறுவார் - மதியுடையவராகவேண்டுவோர்.
|