(க-ரை.) துன்பக்காலத்தில் துன்பத்தைப் பொறுத்திருத்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கும் இன்பமுண்டாக நடத்தலும், அன்பற்றவர் வீடு அடையாமையும் ஒருவழிப்பட்டார் செய்கையாம். ‘துன்பத்துட்டுன்புற்று வாழ்தல்' என்பதற்குப் பிறர்க்குத் துன்பம் வந்த காலத்து அதற்காகத் தாமும் துன்புற்று வாழ்தலும் என்றலுமாம். அன்பிற் செறப்பட்டார் என்பதற்கு அன்பில் அழிவடைந்தவர் என்பதுமாம், உள; பலவின்பாற் குறிப்பு வினைமுற்று. (79) குரவர் பெயர் முதலியன கூறாமைதெறுவந்துந் தங்குரவர் பேருரையா ரில்லத்து உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை என்று முறைகொண்டு கூறார் புலையரையும் நன்கறிவார் கூறார் முறை. (இ-ள்.) நன்கு அறிவார் - உயிர்க்கு நன்மையை அறிந்தவர், தெறுவந்தும் - வெகுண்டாராயினும், தம் குரவர் பேர் உரையார் - தம் பெரியோர் பெயரை வாயாற் சொல்லார், இல்லத்து - வீட்டில், உறுமி - மனையாளைக் கோபித்து, நெடிதும் இரார் - நீண்ட பொழுது அங்கிரார், பெரியாரை -, என்றும் - எப்பொழுதும் முறைகொண்டு கூறார் - முறைமை பாராட்டி (இழிவுபடக்) கூறார், புலையரையுங் - கீழ்மக்களையும், முறை கூறார் - முறைமை பாராட்டிப் பேசார். (ப. பொ-ரை.) நன்கறிவார் தாம் வெகுண்டாராயினும் தங்குரவர் பெயரைச்சொல்லார்; தம்மில்லத்தின்கண் தம் மனைவியை மிகவும் கழறியுரைத்து நெடிதிரார்; தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு சொல்லார்; புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறார். (க-ரை.) வெகுண்ட விடத்தும் தங்குரவர் பெயரைக் கூறுதலும், நெடுநேரம் மனையாளைக் கடிந்து பேசலும், பெரியார் புலைய ரிவர்களை முறைப்பெயரிட் டழைத்தலும் ஆகா. தெறுவந்து - அழியவந்து : அழிதற்குக் காரணமான கோபம் உண்டாகி, தெறு : முதனிலைத் தொழிற்பெயர், உறுமி : ஒலிக் குறிப்புச்சொல், இல்லத்துறுமி என்பதற்கு மனையாளைக்
|