(ப. பொ-ரை.) ஒருவர் பக்கத்தில் வரிசைப்படப் போகார் - ஒருவருடைய நிழலை மிதித்து நில்லார், முள்னர் ஆராய்ந்தன்றிப் பேசும்போது ஆராய்ச்சிசெய்து பேசார், ஊரிலுள்ளோர் வெறுக்கத்தக்கவைகளைச் செய்யார், அரசரது படையளவைப் பகைவர்க்குச் சொல்லார், எப்போதும் ஒரு தன்மையராய் வாழ்தும் என்பார். (க-ரை.) ஒருவர் பக்கத்திற் போகும்போது ஒரு வரிசைப்படப்போதல், ஒருவர் நிழலை மிதித்து நிற்றல், பேசும்போது இடையில் நினைந்து பேசுதல், ஊரார் வெறுப்பன செய்தல், அரசர் படையளவுரைத்தல் இவை ஆகாதன. ஊர் இடவாகுபெயர். இடை : ஏழனுருபு. முனிவு : பலவின்பால் வினையாலணையும் பெயர். (83) பயின்றனவென் றிகழத்தகாதனஅளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும் இளைய எளிய பயின்றனவென் றெண்ணி இகழின் இழுக்கந் தரும். (இ-ள்.) அளை உறை பாம்பும் - புற்றில் வாழும் பாம்பும், அரசும் - அரசரும், நெருப்பும் - தீயும், முழை உறை - குகையில் தங்குகின்ற, சீயமும் - சிங்கமும்; என்ற இவை நான்கும் - என்ற இவை நான்கையும், இளைய - (என்று) இளையனவென்றும், எளிய (என்று) - எளியன வென்றும், பயின்றன (என்று) பழகினவென்றும், எண்ணி - நினைத்து, இகழின் - இகழ்ந்தால், இழுக்கந்தரும் - துன்பத்தைத் தரும். (ப. பொ-ரை.) புற்றில் வாழ் அரவும் அரசனும் தீயும் குகையில் வாழ் சிங்கமும் என்கின்ற இந்நான்கினையும் இளையவென்றும், எளியவென்றும், பழகியவென்றும் எண்ணியிகழின், துன்பந் தருவனவாம். (க-ரை.) பாம்பு அரசன் நெருப்பு சிங்கம் இந்நான்குடன் நெருக்கமாயும் எச்சரிகையில்லாமலும் பழகலாகாது. இளைய எளிய பயின்றன : வினையாலணையும் பெயர்கள். பயின்றன - பயில் : பகுதி. "வேந்த ருங்கொடுந் தீயும்வெவ் விடம்பொழி பகுவாய்ப் பாந்தளுஞ் சரி" என்ற பஞ்சதந்திரச் செய்யுள் இச்செய்யுட் பொருளது. "இளை தென்று பாம்பிகழ்வாரில்" என்பது பழமொழி. (84)
|