(ப. பொ-ரை.) ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால் மனம் வேறுபடாதவர்கள் அவரை நோக்கி, ‘நீவிர் உண்டது யாது' என வினவார். அதுபோல் கீழோரையும் ‘நீவிர் உண்டது யாது' என்று வினவா தொழிக. (க-ரை.) ஐங்குரவரையும் பெரியோரையும் கண்டால், ‘நீங்கள் உண்டது என்ன?' என்று கேட்கலாகாது; அதுபோல் கீழோரையும் கேட்கலாகாது. (86) கட்டிலிற் கிடந்தாருக்குச் செய்யத்தகாதனகிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும் மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் நில்லார்தாங் கட்டின் மிசை. (இ-ள்.) எ ஞான்றும் - எப்பொழுதும், கட்டில் மிசை - கட்டில்மீது, கிடந்தாரை - படுத்திருப்பவரது, கால் கழுவார் - காலைக் கழுவார், பூ பெய்யார் - அவருக்குப் பூப்புனையார், மறந்தானும் - அவருக்கு மறந்தாவது, சாந்தும் பூசார் - சந்தனமும் பூசார், கிடந்தார்கண் - கிடந்தார் அருகில், நில்லார் - நிற்றலுஞ் செய்யார். (ப. பொ-ரை.) எப்போதுங் கட்டிலின்மீது படுத்திருப்பவரது காலைக் கழுவார், அவருக்குப் பூப்புனையார், அவருக்கு மறந்தாவது சந்தனமும் பூசார், அருகில் நிற்றலுஞ் செய்யார். (க-ரை.) ஒருவர் கட்டிலின்மேற் படுத்திருந்தால் அப்போது அவருடைய காலைக் கழுவுதலும், அவருக்குப் பூச்சூடுதலும், சந்தனம் பூசுதலும், அவரருகில் நிற்றலும் ஆகா. "கிடந்தாரைக் கால் கழுவார்" என்னும் முடிபை "முதலை ஐயுறின் சினையைக் கண்ணுறும், அதுமுதற் காயின் சினைக்கு ஐயாகும்" என்ற சூத்திரப்படி முடித்துக்கொள்க. கிடந்தாரைப் பூப்பெய்யார் என்பதில் கிடந்தாரை : உருபு மயக்கம். "நில்லாராங் கட்டின் மிசை" என்று பாடம் கொண்டு கிடந்தவர்கள் கட்டிலின்மேலே மிதித்தேறி நில்லார் என்க. (87) உதவிப் பயனுரையாமை முதலியனஉதவிப் பயனுரையார் உண்டி பழியார் அறத்தொடு தானோற்ற நோன்பு வியவார் திறத்துளி வாழ்துமென் பார்.
|