(க-ரை.) கிடைத்தற் கரியவற்றை விரும்புதலும், இழந்த பொருட்கு வருந்துதலும், அரிய துன்பத்திற்கு மனங் கலங்குதலும் பயனற்ற செயல்களாம். கைவாரா; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், கைவரு : பகுதி - அகப்படு, கை வாரா இடுக்கண் - நன்மை பயவாத இடுக்கண் "கிட்டா தாயின் வெட்டென மற" "கற்றார்முற்றோன்றா கழிவிரக்கம்" "கழிந்ததைத் தானிரங்கான் கைவாரா நச்சான்" எனப் பிறர் கூறுவதுங்காண்க. இடுக்கண் : இடுங்குகண் என்பதன் மரூஉ. "கையார வந்த இடுக்கண்" என்றும் பாடம், (89) தலைப்பூ மோத்தல் முதலியனதலைக்கிட்ட பூமோவார் மோந்தபூச் சூடார் பசுக்கொடுப்பிற் பார்ப்பார்கைக் கொள்ளாரே யென்றும் புலைக்கெச்சில் நீட்டார் விடல். (இ-ள்.) என்றும் - எப்பொழுதும், தலைக்கு இட்டபூ - தலையில் முடித்த பூவை. மோவார் - தாம் முகவார், மோந்த பூ - மோந்த பூவையும், சூடார் - அணியார், பார்ப்பார் - பிராமணர், பசு கொடுப்பின் - தானமாகப் பசுவினைக் கொடுத்தாலும், கைக்கொள்ளார் - அதனைப் பெரியோர் வாங்கார், புலைக்கு - புலையருக்கு, எச்சில் நீட்டார் - எச்சிலுணவைக் கொடார், விடல் - (ஆதலால் இவைகளை) விடுக. (ப. பொ-ரை.) எப்போதும் தலையில் முடித்த பூவைத்தாம் முகவார், ஒருவர் மோந்த பூவையும் சூடார், பிராமணர் பசுவினைக் கொடுத்தாலும் அதனைப் பெரியோர் வாங்கார், புலையருக்கு எச்சிலைக் கொடார், (ஆதலால்) இவைகளை விடுக. (க-ரை.) தலையில் முடித்த பூவை மோத்தலும், மோந்த பூவைச் சூடுதலும், பிராமணரிடம் பசுக்கொடை பெறலும் கூடா; புலையருக்கு எச்சில் கொடுத்தலும் ஆகாது. விடல் : அல் ஈற்று உடன்பாட்டு வியங்கோள். மோவார், சூடார், கொள்ளார், நீட்டார் இவற்றை முற்றெச்சமாகக் கொண்டு விடல் என்பதனோடு கூட்டி யுரைத்தலுமாம். (90)
|