பக்கம் எண் :

74

அந்தணர்வாய் - அந்தணரிடத்து, நாள் கேட்டு செய்க - நாள் கேட்டே நற்கருமம் செய்க. அவர் வாய் சொல் - அவர் வாய் மொழி, என்றும் -, பிழைப்பது - பிழைபடுபவது, இலை - இல்லை.

(ப. பொ-ரை.) அறிவுடையோர் மேலான நற்கருமங்களைச் செய்யுமிடத்து எப்போதும் புலையரிடத்து நாட்கேட்டுச் செய்யார். ஒழுக்கக் கேடில்லாத அந்தணரிடத்து நாட்கேட்டே நற்கருமஞ் செய்க; அவர் வாய்ச்சொல் என்றும் பிழைபடுவதில்லை ஆதலால்.

(க-ரை.) நற்கருமம் செய்பவர் ஒழுக்கங் குன்றாத அந்தணர்வாய் நாட் கேட்டுச் செய்தலே நன்மையானது.

அந்தணர் : காரணவிடுகுறிப்பெயர். புலையர் - வள்ளுவர், சோதிடங்கூறுங் கீழ்வகுப்பார் என்பர். பிழைப்பதில் என்பதைச் சொல் என்ற பால்பகா அஃறிணைப் பெயரின் பயனிலையாகக் கொள்க. சொல் : சாதி யொருமை ‘நிலையியைந்த நற்கருமம்' என்றும் பாடம்.

(92)

மன்றத்து நின்றுஞற்றல் முதலிய ஆகாச் செயல்

மன்றத்து நின்றுஞற்றர் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றுங் கடுஞ்சொ லுரையார், இருவராய்
நின்றுழியுஞ் செல்லார் விடல்.

(இ-ள்.) மன்றத்து நின்று - சான்றோர் அவையிலிருந்து, உஞற்றார் - அங்கக் குறும்பு செய்யார், மாசு - அழுக்கை, திமிர்ந்து - உதிர்த்துக்கொண்டு, இயங்கார் - செல்லார், என்றும் - எப்பொழுதும், கடு சொல் உரையார் - கடுமையான சொல்லைச் சொல்லார், இருவராய் நின்ற உழியும் - இரண்டு பேராய் நின்று பேசுமிடத்தும், செல்லார் - போகார், விடல் - (ஆதலால் இவற்றை) விட்டு விடுக.

(ப. பொ-ரை.) அறிஞர், சான்றோர் அவைக்களத்து யாதோர் அங்க சேட்டையுஞ் செய்யார், மாசுள்ளவற்றைத் திமிர்ந்து கொண்டு நடவார், எக்காலத்தும் கடுஞ்சொற்கள் உரையார், இருவராயிருந்து பேசுமிடத்தும் போகார், ஆதலால் இவற்றை ஒழிக.

(க-ரை.) பெரியோர் அவையில் யாதோர் அங்க சேட்டையுஞ் செய்தலாகாது; நடக்கும்பொழுது அழுக்கைத் தேய்த்து