பக்கம் எண் :

76
பொன்போற் போற்றத்தக்கவை

தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்
றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதந் தரும்.

(இ-ள்.) தன்உடம்பு - தன்னுடைய உடம்பும், தாரம் - மனைவியும். அடைக்கலம் - அடைக்கலமாக வைத்த பொருளும், தன் உயிர்க்கு என்று - தன் உயிர்க்கு உதவியாகுமென்று, உன்னித்து - நினைத்து, வைத்த பொருளோடு - சேர்த்துவைத்த பொருளும், இவை நான்கும் - இந்த நான்கையும், பொன்னினைப் போல் - பொன்னைக்காப்பதுபோல, போற்றி காத்து உய்க்க - ஆதரித்துப் பாதுகாத்து ஒழுகுக, உய்க்காக்கால் - அவ்விதம் பாதுகாத்து ஒழுகாவிடின், மன்னிய - மிகுந்த. ஏதம் - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

(ப. பொ-ரை.) தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.

(க-ரை.) தன்னுடம்பு, தன்னுடைய மனைவி, அடைக்கலப் பொருள், தான் சேர்த்துவைத்த பொருள் இவற்றை அருமையாகப் பாதுகாக்க வேண்டும்.

"எண்ணி நினைத்த பொருளோடு" என்றும். ‘எண்ணித்து வைத்த பொருளோடு' என்றும், ‘அன்றே விழுமந் தரும்' என்றும் பாடம். உய்க்காக்கால் : வினையெச்சம். இது ‘உய்யாக்கால்' என்றும் பாடம்.

(95)

எறும்பு முதலியபோற் கருமஞ்செய்தல்

நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை யென்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க் காசாரம்
எப்பெற்றி யானும் படும்.

(இ-ள்.) நந்து எறும்பு - ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் புள் - தூக்கணங்குருவியும், காக்கை - காக்கையும், என்ற