"'ஐயநீ யாடுதற் கமைந்த சூதுமற் றெய்துநல் குரவினுக் கியைந்த தூதுவெம் பொய்யினுக் கருந்துணை புன்மைக் கீன்றதாய் மெய்யினுக் குறுபகை என்பர் மேலையோர்"
என்றும் ஆன்றோர் கூறுமாற்றால், சூதர் கழகம் புகுதல் ஏதந்தருமென்றார். (98) நடுக்கற்ற காட்சியார் செய்யாதன1உரற்களத்து மட்டிலும் பெண்டிர்கள் மேலும் நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார் இல்லம் புகாஅர் விடல். (இ-ள்.) நடுக்கு அற்ற காட்சியார் - சோர்வற்ற அறிவுடையவர், உரல் களத்தும் - ஆரவாரஞ் செய்யுமிடத்தும், அட்டிலும் - மடைப்பள்ளியிலும், பெண்டிர்கள் மேலும் - பெண்கள் உறையிடத்தும், நோக்கார் -, எடுத்து இசையார் - எடுத்துரையார், இல்லம் புகார் - இல்லத்துட் புகார்; ஆதலால் நீ விடுக. (ப. பொ-ரை.) சோர்வற்ற அறிவை யுடையவர் ஆரவாரஞ் செய்யுமிடத்தும் மடைப்பள்ளியிலும் பெண்டிர்கள் உறையிடத்தும் நோக்கார், எடுத்துரையார், இல்லத்துட்புகார் : ஆதலால் நீ விடுக. (க-ரை.) ஆரவாரஞ் செய்யுமிடத்தைப் பார்த்தலும், மடைப்பள்ளியில் எடுத்துரைத்தலும், பெண்டிர்கள் உறைகின்ற இடத்துப் புகுதலும் ஆகா. "எடுத்திசையார் இல்லம் புகாஅ விடல்" என்பதற்கு வாருமென்று அன்பாக அழையாத மனையிடத்துப் புகுதலொழிக என்றுரைத்தலுமாம். அட்டில் - அடு + இல். நடுக்கு : நடுங்கு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். (99)
நடுக்கற்ற காட்சியவர் - கலக்கமற்ற மெய்யறிவினையுடையவர்கள், உரல்களத்து நோக்கார் - மகளிர் உரலில் ஒன்றையிட்டுக் குற்றிக்கொண்டிருக்கும் பொழுது அவர்களைப் பாரார்; அட்டில் எடுத்து இசையார் - சமையலறையில் புகுந்து தமது கருத்தை எடுத்துரையார்; பெண்டிர்கள் மேவும் இல்லம்புகார் = பெண்டிர் தனித்துறையும் இல்லத்துட்புகார் ஆதலால், மேலே கூறிய இடங்களில் நோக்குதலும், உரையாடலும், புகுதலும் தவிர்க. 1.‘மேலும்' என்பது மேவும் என்று இருத்தல் வேண்டும்.
|