ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே முந்தையோர் கண்ட முறை. (இ-ள்.) விழுத்தக்கார் - சிறப்புப் பொருந்தியவர்,உடுத்து உடுத்து அலால் நீராடார் - ஓர் ஆடையை உடுத்தல்லதுநீராடமாட்டார், ஒன்று உடுத்து - இரண்டு உடுத்தன்றிஒன்றை உடுத்து. உண்ணார் - உண்ணமாட்டார், உடுத்தஆடை - உடுத்த உடையை, நீருள் பிழியார் - நீரிற்பிழியமாட்டார், ஒன்று உடுத்து - ஓராடையுடுத்து, அவைபுகார் - அவையின்கண் செல்லார், என்பது - என்றுசொல்லப்படுவது, முந்தையோர் - பழையார், கண்டமுறை- கண்டமுறைமை. (ப. பொ-ரை.) ஒன்றனை யுடுத்தல்லது நீராடார், இரண்டுஉடுத்தன்றி ஒன்றுடுத்து உண்ணார், உடுத்த ஆடையை நீரின்கண்பிழியார், சீர்மை தக்கார் ஓராடையையுடுத்து அவையின்கண்செல்லார் என்று சொல்லப்படுவது பழமையோர் கண்டமுறைமை. (க-ரை.) நீராடல் உண்ணல் அவை புகல் ஆகிய காலங்களில்உடையுடுத்த வேண்டிய முறையில் உடுத்துக. விழுத்தக்கார் - சீர்மை பொருந்தியவர், விழுமம்- சிறப்பு. "உடுத்தாடை யில்லாத நீராட்டும்"என்பது திரிகடுகம். அலால் : தொகுத்தல் விகாரம்.உடுத்த ஆடை என்பதில் அகரந்தொக்கு உடுத்தாடை எனவந்தது. (11) தவிர்க்க வேண்டுவன தலையுரைத்த எண்ணெயா லெவ்வுறுப்புந் தீண்டார் பிறருடுத்த மாசுணியுந் தீண்டார் செருப்புக் குறையெனினுங் கொள்ளா ரிரந்து. (இ-ள்.) தலை உரைத்த எண்ணெயால் - தலையின்கண் தேய்த்த எண்ணெயினால், எவ்வுறுப்பும் தீண்டார் - யாதோர் உறுப்பும் தீண்டார், பிறர் உடுத்த, மாசுணியும் - அழுக்காடையும், தீண்டார், இரந்து - பிறர் இரந்து, குறை எனினும் - தமக்குக் காரியமென்று வேண்டிக்கொண்டாலும், செருப்பு - பிறர் தொட்ட செருப்பும், கொள்ளார் - காலில் அணிந்து கொள்ளார். (ப. பொ-ரை.) தலையின்கண் தேய்த்த எண்ணெயால் யாதோர் உறுப்புந் தீண்டார், பிறர் உடுத்த அழுக்காடையும் தீண்டார், பிறர் தொட்ட செருப்பும், பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக் கொள்ளினுங் கொள்ளார்
|