பொருள்களை - பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள், அறிவில்லான் மெய்தலைப் பாடு - கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல், எற்றேல் - எத்தன்மைத் தெனில், நாவல்கீழ் பெற்ற கனி - நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி, பிறிதில்லை -கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை. (க-து.) கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களைஅறியமாட்டார்கள். (வி-ம்.) 'கற்றானும், கேட்டானும்' என்ற இடங்களில் ஆயினும் என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. கல்வி கேள்விகளில்லாதவன் உண்மைப் பொருள்களை அறிதல் அருமை என்பதற்கு, 'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது உவமையாகக் கூறப்பட்டது. திருவள்ளுவனாரும் 'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்' என்று அறிதல் அருமையை விளக்கினார். 'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி. (1) 12. கல்லாதான் கண்டகழிநுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய் வினாமுந் துறாத உரையில்லை இல்லை கனாமுந் துறாத வினை. (சொ-ள்.) நல்லாய் - நற்குணம் உடைய பெண்ணே!, கல்லாதான் கண்ட கழிநுட்பம் - நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், கற்றார் முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால், வினா முந்துறாத உரையில்லை - வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனா முந்துறாதவினை இல்லை - கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும்இல்லை.) (க-து.) கல்லாதான் கண்ட நுண்பொருள்விளங்குதல் இல்லை. (வி-ம்.) நூலறிவு இன்மையின் ஆராய்ந்தறிந்த பொருள் இல்லையென்பார், 'கண்ட கழி நுட்பம்' என்றார். கழி நுட்பம் என்பதற்குக் கல்லாதான் மிகுந்த நுண்பொருளாகத் தான் நினைந்திருக்கின்ற கழிநுட்பம் என்று உரைகூறினும் அமையும். குறித்த பொருளை மறைத்து வேறு பொருள்களைக்கிளத்தலின
|