பக்கம் எண் :

107

செய்து முடிக்கமாட்டாதவராய், பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் - பிறகு வேறொருவரால் செய்வித்துக் கொள்வோம் என்று சோம்பியிருத்தல், வெந்நீரும் ஆடாதார் - வெந்நீரினும் குளியாதார், தீ பாய்பவோ - தீயின்கண் பாய்வார்களோ? (இல்லை. அதுபோல அதுவுமில்லையாம்.)

(க-து.) தம்மால் முடியும் செயலைத் தாமேசெய்தல் வேண்டும்.

(வி-ம்.) சுடுநீரிலும் குளியாதார் தீயிற் பாய்தல் இலர். அதுபோல, தன்னாலே முடிவனவற்றைச் செய்யாதார் பிறராலே முடித்துக்கொள்ளுதல் இலர். தன்னால் இக் காரியம் முடியும் என்பதறியப்பட்டதாகலின், அதனை உடனே செய்தல்வேண்டும். இங்ஙனம் செய்யாது பிறரை நம்பின், அவரால் அக்காரியம் முடியுமா முடியாதாஎன்று ஆராயப் படவேண்டுதலின் செயல் முடியாதென்பதாம்.

'பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ' என்பது பழமொழி.

(11)

160. முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது.

(சொ-ள்.) முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று - முழுதுலகத்தையும் முன்னே உண்டாக்கியவன் நமக்காக அல்லலையும் படைத்தான் என்று நினைத்து, தொழுது இருந்தக் கண்ணே அல்லல் ஒழியுமோ - இஃது அவனாலேயே நீங்கும் போலுமென்று நினைத்து அவனையே தொழுதுகொண்டு முயற்சியின்றி யிருப்பின் துன்பம் நீங்குமோ? முன்னம் ஓலை பழுது எழுதினான் - முதலில் ஓலையைப் பழுதுபடஎழுதியவன், இழுகினானாக - தாம் குற்றம் செய்தவனாக அறிந்தபின், காப்பது இல்லை - செய்த குற்றத்தைப் பாதுகாப்பதில்லை. (உடனேநீக்குவன் என்பதாம்.)

(க-து.) துன்பம் தெய்வத்தால் வந்ததாயினும் அதனைநீக்க முயற்சி செய்க.

(வி-ம்.) ஓருயிர் செய்தவினையின் பயன் பிறிதோருயிரின் கட் செல்லாது அவ்வுயிர்க்கே வகுத்தலின் அவன் வகுத்தான் எனப்பட்டான். ஆகவே, இவ்வல்லலை நீக்கவேண்டு மென்று தொழுததினால் அதற்குப் பரிந்து நீக்கான் என்பதாம். ஆகவே