ஆகுக - அவர்கள் காரியம் முடிக்கும்பொருட்டு எந்த நீர்மை உடையராய் ஒழுகினும் ஒழுகுக, அவரவர் தம் நீரர் ஆதல் தலை - ஏனையகாலங்களில் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினராய்ஒழுகுதல் தலைசிறந்தது. (க-து.) ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினை விடாராய் ஒழுகுதலே தலைசிறந்தது. (வி-ம்.) காரியம் முடிக்கும்பொருட்டு அதற்கேற்ற தன்மையராய் ஒழுகினும், ஏனைய காலங்களில் தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணேயே ஒழுகுதல் வேண்டும். காரியம் முடிக்கும் பொழுதும் தத்தமக்குரிய இயல்பினராய் ஒழுகுதலே தலை சிறந்தது. பொய்ந் நீரராகி ஒழுகுதல் அத்துணைச் சிறப்பின்று, இது கருதியே 'தந்நீரர் ஆதல் தலை'என்றார். 'தந்நீரர் ஆதல் தலை' என்பது பழமொழி. (10) 193. யாவரே யானும் இழந்த பொருளுடையார் தேவரே யாயினும் தீங்(கு)ஓர்ப்பர் - பாவை படத்தோன்று நல்லாய்! நெடுவேல் கெடுத்தான் குடத்துளு நாடி விடும். (சொ-ள்.) பாவை பட தோன்றும் நல்லாய் - சித்திரப் பாவையது தன்மை பொருந்தித் தோன்றும் நல்லாய்!, நெடுவேல் கெடுத்தான் - நீண்ட வேலைத் தொலைத்தா னொருவன், குடத்துள்ளும் - குடத்துள்ளேயும், நாடி விடும் - நாடுவான் (அதுபோல), இழந்த பொருள் உடையார் - கெடுத்ததொரு பொருளையுடையார், யாவரே யானும் - எத்தகைய சிறந்த அறிவினை யுடையவராயினும், தேவரே யாயினும் - முன்னிற்பார் தேவர்களேயானாலும், தீங்கு ஓர்ப்பர் - தமது பொருளைக்கைக்கொண்டாரெனத் தீமையாக நினைப்பர். (க-து.) பொருளினை இழந்தார் ஆராயாது ஐயுறுவராயின் அது நோக்கி அவரைவெறுக்காது பொறுத்தல் வேண்டும். (வி-ம்.) ஆயினும் என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. 'யாவரேயானும்' ........ என்றமையால் எத்தகையோரும் பொருளினை இழந்தவிடத்துத் தந் திறத்திற் சிறிது குன்றுவர் என்பது பெறப்படும். 'தேவரே யாயினும்' என்றது இவர் பொருள் கொண்டு ஒன்றுஞ் செய வேண்டாதுஇயல்பாகவே
|