தொடங்கிய செயல்கள், ஒல்லாத இன்றி - முடியாதன இல்லாமல், நல்லவாய் நாடி நடக்கும் - நன்மையாகவே ஆராயப்பட்டு முடியும், இல்லார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கு, இடரா(க) இயலும் - அவர் தொடங்கிய காரியங்கள் துன்பமாகவே முடியும், கடலுள்ளும் - கடல்தாண்டிச் சென்ற இடத்தின்கண்ணும், நன்கு காண்ப - செய்யத் தொடங்கிய செயலின்கண் வெற்றியையே காண்பார்கள். (க-து.) பொருள் உடையார்க்கு முடியாதசெயல்கள் யாண்டும் இலவாம். (வி-ம்.) பொருள் உடையார் இல்லார்என்ற இருதிறத்தார்க்கும் செயல்கள் தாமே முடிதலில்ஒக்குமாயினும், அவர்க்கு நன்றாகவும் இவர்க்குத்தீதாகவும் முடியு மென்பதாம். இடராவியலும்எனப் பொதுப்படக் கூறவே, செயல்கள்தாம் வெற்றியாகமுடியாதொழிதலே யன்றித் தம்மைச் செய்தாரையும்இடர்ப்படுக்கு மென்பதாம். கடலுள்ளும் என்றதுபிற நாட்டின் கண்ணும் என்பதை. கடலுள்ளும் காண்பவே நன்குஎன்பது பழமொழி. (2) 198. அருமை யுடைய பொருளுடையார் தங்கண் கரும முடையாரை நாடார் - எருமைமேல் நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத் தேரை வழிச்சென்றா ரில். (சொ-ள்.) எருமைமேல் - எருமையின்மீது, நாரை துயில்வதியும் ஊர - நாரை தூங்குகின்ற மருதநிலத் தலைவனே, குளம் தொட்டு - குளத்தினைத் தோண்டி, தேரைவழிச் சென்றார் இல் - (அதனிடத்தில் உறைவதற்குத்) தேரை இருக்குமிடத்தைத் தேடிச் செல்வா ரிலர். (அதுபோல), அருமை உடைய பொருள் உடையார் - பெறுதற் கருமையை உடைய பொருளினை உடையார். தங்கண் - தம்மிடம், கருமம் உடையாரை - காரியம் உடையவர்களை, நாடார் -தேடுதலிலர். (க-து.) பொருளுடையாரிடம் கருமம் உடையார் தாமே தேடி வருவர். (வி-ம்.) குளத்தினைத் தோண்டியவுடன் தேரைகள் தாமே வந்து சேருதல்போல, செல்வமுண்டான அளவிலே கருமம் உடையார் தாமே வந்து சேருவர். 'குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றா ரில்' என்பது பழமொழி. (3)
|