ஆண் வண்டுகள் பின் செல்லாநின்ற வாள்போலுங் கண்களையுடைய பெண்ணே!, வித்தகர் - அறிஞர், கேட்பாரை நாடி - தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை உரைப்பர் - தம்மால் கூறப்படும் பொருளிடத்து அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள்,அவை தோற்பன கொண்டு புகார்-அவையின்கண் தோல்வியடைதற்குரியனவற்றைக் கொண்டு போகார். (க-து.) கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர். (வி-ம்.)'நாடி' என்றதனால் அறிவாரைத் தேடி உரைத்தல் வித்தகர்க்கு இயல்பு என்பது பெறப்பட்டது.கேட்பாரையும் கிளக்கப்படும் பொருட்கண் வேட்கையையும் அறிந்து கூறுதலின் வித்தகர் என்றார். தோற்பன - அவையிலுள்ளார் விரும்பாத பொருள்கள். தாம் விரும்பியவாறு, அப்பொருள்களை அவையிலுள்ளார் விரும்பாமையின் தோற்பதற்குரிய ஆயின. (1) 18. ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா பெருவரை நாட! சிறிதேனும் இன்னா(து) இருவர் உடன்ஆடல் நாய். (சொ-ள்.) பெரு வரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, இருவர் நாய் உடன் ஆடல் - (ஒரே காலத்தில்) இருவரும் ஒரு நாயைக்கொண்டு வேட்டை ஆடுதல், சிறிதேனும் - சிறிது காலமாயினும், இன்னாது - இனியது ஆகாது. (அதுபோல), ஒருவர் உரைப்ப - (மாறுபடுவோர் இருவருள்) ஒருவர் இப்பொருள் இத் தன்மைத்தென்று கூற, உரைத்தால் - மற்றொருவரும் இத் தன்மைத்தென்று கூறினால், அதுகொண்டு - அப்பொருளைக்கொண்டு, இருவர் ஆவாரும் எதிர் மொழியல் - மாறுபடுவோர் இருவரும் (ஒரே காலத்தில்) வாதஞ்செய்தால், பாலா - தகுதியுடையதாகுமா?ஆகாது. (க-து.) வாதம் செய்வோர் ஒருவர்பின் ஒருவராகப் பேசுதல்வேண்டும். (வி-ம்.) வேட்டம் விரும்பிப் புகுந்த இருவர் இரண்டு நாயைக்கொண்டு வேட்டம் புரிந்தாலன்றித் தாம் நினைத்த வேட்டம் முடிவு பெறாது. வேட்டம் முடிவு பெறாமையின் அஃது இன்னாதது ஆயிற்று. வாதஞ் செய்வோர் இருவரும் தங்கருத்தை
|