(வி-ம்.) 'திங்களும்' என்றது தூய்மையை உடைய சந்திரனும் தீங்குற்றது எனச் சிறப்பும்மையாக நின்றது. எனவே இப்பொழுது மிகத் தயாராக இருந்தும் துன்பத்தை யடைதல் முற்பிறப்பில் செய்த தீவினையாலேயாம். 'உறற்பால' என்றது மேல்வரும் பிறப்புகளுக்கு உறுதுணையாமாறு தாமே செய்து கொண்ட தீமைகளை. 'யார்க்கும்' என்றது முயற்சி செய்து ஆற்றலால் மாற்றும் இயல்புடையாரே யெனினும் என்பது. 'உறும்' என்றது குழக்கன்றைப் பல்லாவுள் உய்த்துவிடினும் அது தன் தாயை நாடிக் கோடல்போல முன் செய்த வினை, செய்தானைத் தானே தேடி அடையும் ஆற்றலும் பெற்றது என்பதாம். இதுவன்றி ஊழும் உறுவித்தலான் வரக்கடவ வந்தே தீரும்என்பதாம். 'உறற்பால யார்க்கும் உறும்' என்பது பழமொழி. (3) 230. கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. (சொ-ள்.) கழுமலத்தில் யாத்த களிறும் - சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூர் விழுமியோன் மேல் சென்றதனால் - கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், விழுமிய - சிறந்த பொருள்களை, வேண்டினும் வேண்டாவிடினும் - விரும்பினும் விரும்பாதொழியினும், உறற்பால - அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள், தீண்டாவிடுதல் அரிது - அவனைஅடையாது நிற்றல் இல்லை. (க-து.) தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும். (வி-ம்.) கழுமலம் : இது சோழநாட்டுள்ள தோரூர். கருவூர் : இது சேரநாட்டுள்ளதோரூர். இவ்விரண்டும் இடைபடச் சேயவாயினும் ஊழ் கருவூரிலுள்ளவனை அரசனாக்கியது. 'விழுமியோன்' என்றது. பின்னர் 'இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டிய வுரவோன்' ஆக விளங்குதலின். கரிகாலன் நெடுந்தொலைவின் கணிருந்து விரும்பாதிருப்பினும் ஊழ் விழுமிய பயனை அடைவித்தது. 'களிறுமேற் சென்றதென்றது,' சீகாழியை ஆட்சிசெய்தான் இறந்துபடவே அவன் வழியில் யாரும் அவ்வரசாட்சியை ஏற்க இன்மையால் அமைச்சர்கள் பட்டத்து யானையை விட்டு அவ்யானை யாரைக்கொண்டுவருகின்றதோ
|