பக்கம் எண் :

164

அரசர்களுக்கும் முடியாதவாறு இடைநின்று தடுக்கும். முடிக்கும் ஆற்றலில்லாத அறிவிலார்க்கும் இடைநின்று அவர் செல்வத்தைப் பெருக்கும். ஆற்றலில் மிக்கார்க்கும்இல்லார்க்கும் ஒவ்வொன்று காட்டியவாறு.

'நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி' என்பது பழமொழி.

(10)

237. ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்.

(சொ-ள்.) ஏகல் - உயர்ச்சியையுடைய, மலை நாட - மலை நாடனே!, ஆகும் சமயத்தார்க்கு - செல்வம் ஆக்கும் ஆகூழ்வந்தெய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு, ஆள்வினையும் வேண்டா - செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை; போகும் பொறியார் - செல்வம் போக்கும் போகூழ் வந்தெய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, புரிவும் பயன் இன்று - அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை; என் செய்து என் பெறினும் - எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும், ஆகாதார்க்கு - செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு, ஆகுவது இல் -ஆவதொன்றில்லை.

(க-து.) ஆகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா; ஆகூழ் நெருங்காதார்க்கும்முயற்சி வேண்டா.

(வி-ம்.) 'போகும் பொறியார் புரிவும்' என்ற இறந்தது தழீ இய எச்சவும்மையான் போகூழ் நெருங்கப்பெறாதார் முயற்சியும் என்பது கொள்ளப்பட்டது. தானே முடிதலின் ஆள்வினை வேண்டா என்றார். போகூழ் காலம் நெருங்கப் பெற்றாரும், பெறாதாரும் எத்துணை முயற்சி செய்யினும் நிலை நிறுத்துதலும் நீக்குதலும் ஆகாமையின் புரிவும் பயனின்றே என்றார். 'உய்த்துச் சொரியினும் போகா தம' என்பது மறைமொழி. ஆகுங்காலம் நெருங்கப்பெறாதார் துணைகொண்டு செய்யும் முயற்சிகளாலும் பயனின்றென்பார், 'ஆகுவது இல்' என்றார். ஊழ் நன்மை தீமைகளை ஊட்டுவது ஒவ்வொருவனது செயல்வாயிலாகவே யெனினும் காலம் மிக நெருங்கிய வழி அவனது செயலை அல்லது முயற்சியை எதிர்பாராது பிறரது செயல் வாயிலாக