(சொ-ள்.) துளியுண் பறவைபோல் - நீர்த்துளியையே உண்ணுகின்ற வானம்பாடியைப்போல, செவ்வன் நோற்பாரும் - செம்மையான ஒன்றினையே நோக்கித் தவம் செய்கின்றவர்களுள்ளும், எளியாரை எள்ளாதார்இல் - எளியவர்களைச் சினந்திகழாதார் யாரும் இல்லை, (அதுபோல), களியானை மன்னர்க்கு - செருக்குப் பொருந்திய யானைப்படையை உடைய அரசர்களுக்கு, எளியாரை - தம்மோடு மாறுபட்டு ஒழுகும் எளிய அரசர்களை, மீது ஊர்ந்து ஒழுகுவது அல்லால் - மேற்பட்டுச் சென்று போரிட்டு வென்று ஒழுகுவதேயல்லாமல், கை கடத்தல் - அது செய்யாது இகழ்ச்சியான் நீக்குதல், ஏதம் -துன்பந்தருவதாம். (க-து.) தன்னோடு மாறுபட்டொழுகும் எளிய அரசர்களை அரசன் உடனேசென்று வெல்க. (வி-ம்.) 'பறவைபோல் நோற்பார்' என்றது வானம்பாடி உண்ணுதற்கு மழைத்துளி ஒன்றனையே எதிர்நோக்கி நிற்பதுபோல, நோற்பாரும் தம் மனப்பட்ட அதனையே நோக்கித் தவஞ்செய்வர்என்பதாம். எளியாரை என்றது, அவர் தவத்திற்கு மாறுபட்டு நிற்போரை. மேல் எளியாரை வேறல் வேண்டும் எனக் கூறவேண்டுதலின் தவத்திற்கு மாறுபட்டு நிற்போரை 'எளியார்' என்றார். ஒளியார் என்றது. அரசன் என்னும் பொருட்டாய் நின்றது. எளியாரை என்று பின்னர்க் கூறப்படுதலின் எளிய அரசர்களை என்பது பெறப்பட்டது. அன்றியும் 'களியானை மன்னர்க்கோ' என்றமையானும் அவர் எளியார் என்பது பெறப்படும். 'மெலியார்மேல் மேக பகை' என்றலின் அது 'கை' எனப்பட்டது. 'ஏதம்' என்றார், தன்னால் வேறலாயிருக்கும்பொழுதே எளிய அரசர்களைக் கோறாதொழிவார், அவர் வலியராய் உயிர்த்த துணையானே இறந்தொழிவார் என்பதைக் கருதி. 'செவ்வன் நோற்பாரும் எளியாரை எள்ளாதார் இல்' என்பது பழமொழி. (8) 249. மறுமனத்தன் அல்லாதமாநலத்த வேந்தன் உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப ஆயிரம் காக்கைக்கோர் கல். (சொ-ள்.) மறுமனத்தன் அல்லாத - குற்றமுடைய மனத்தனல்லாத மனதையும், மா நலத்த - சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய, வேந்தன்- அரசன், உறுமனத்தன் ஆகி
|