265. தீயன வல்ல செயினும் திறல்வேந்தன் காய்வன சிந்தியார் கற்றறிந்தார் - பாயும் புலிமுன்னம் புல்வாய்க்குப் போக்கில் அதுவே வளிமுன்னர் வைப்பாரம் இல். (சொ-ள்.) பாயும் புலி முன்னர் - பாய்ந்து வருகின்ற புலியின் முன்னுள்ள, புல்வாய்க்கு போக்கு இல் - மானுக்குத் தப்பிச் சென்று புகும் புகலிடம் வேறு இல்லை, அதுவே - அதுபோலவே, வளி முன்னர் - சூறாவளிக் காற்றின் முன்னர், வைப்பாரம் இல் - வைக்கோற் பாரம் நிலைத்து நிற்குமாறில்லை (ஆகையால்), திறல் வேந்தன் தீயன அல்ல செயினும் - வெற்றியையுடைய அரசன் தீமை தருவனவாகிய நல்லது அல்லாத செயல்களைச் செய்வானாயினும், கற்று அறிந்தார் - நீதி நூல்களைக் கற்று உலக இயலையும் அறிந்த அமைச்சர்கள், காய்வன சிந்தியார் - அரசன் சினத்தற்குரியனவற்றை மனத்தினும் நினைத்தலிலர். (க-து.) அரசன் தீய செயல்களைச் செயினும்அமைச்சர்கள் சினத்தலிலர். (வி-ம்.) 'சிந்தியார்' என்றார் 'யாண்டுச் சென்று யாண்டு முளராகார்' என வருந் தீமையை நோக்கி மனத்திலும் நினைத்தலிலர் என்பது கருதி.அல்ல என்பதற்கு நல்லது அல்லாதது எனப் பொருள் கொள்க.கற்றறிந்தாராதலின் அரசன் சினங் கொள்ளுமாறு வற்புறுத்தி எதையும் கூறுவதிலர்.சூழ்ச்சியோ அன்றி மற்றெம்முறையோ கொண்டு அரசனைத் திருத்துவதன்றி இது செய்யார் என்பதற்குப் பழமொழிகள் இரண்டும் ஏதுவாய் நின்றன. 'புலி முன்னர் புல்வாய்க்குப் போக்குஇல்' 'வளி முன்னர் வைப்பாரம் இல்' என்பன பழமொழிகள். (8) 27.மன்னரைச்சேர்ந்தொழுகல் 266. கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை மடித்தொழிதல் என்னுண்டாம் மாணிழாய்! கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல். (சொ-ள்.) மாண் இழாய் - மாட்சிமைப்பட்ட அணிகலன்களை உடையாய்!, கள்ளைக்குடித்து - மயக்கந்தரும் கள்ளினைக்
|