பக்கம் எண் :

189

குடித்து, குழைவார் இல் - சோம்பி அடங்கியிருப்பார் ஒருவருமிலர் (ஆதலால்), கொடித் திண் தேர் மன்னர் - கொடி அசைகின்ற வலிய தேரினை உடைய அரசர்களது, கூட்டு உண்டு வாழ்வார் - பொருளை உண்டு உயிர் வாழ்பவர்கள், எடுத்து மேற்கொண்டு - ஒரு செயலை மனத்தின்கண் நினைத்தலை மேற்கொண்டு, அவர் ஏய வினையை - அவ்வரசர் ஏவிய ஆணையை, மடித்து ஒழிதல் - சோம்பல்கொண்டு விரைந்து செய்யாதொழிதலால், என் உண்டாம் -என்ன பயன் உண்டாம்?

(க-து.) அரசன் ஆணையை உடனேயே அவன்கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) ஆலும், ஓவும் அசைநிலைகள். கூட்டு என்றது அரசனால் சுங்கம் முதலிய பல வழியானும் கடைக்கூட்டப்பட்ட பொருள் என்பதாம். ஏவிய என்பது ஏய என்றாயது இடைக் குறையாம். கள்ளைக் குடித்தார் அடக்கமாக ஓர் இடத்தில் சோம்பி இருத்தல் இலர். அதுபோல், அரசனது பொருளைக் கொண்டு உண்டு வாழ்பவர்கள் அவன் ஏவிய தொன்றனைச் செய்யாது சோம்பியிருத்தலும் இல்லையாதல் வேண்டும். 'மடித்தொழிதல் என்னுண்டாம்' என்றது, விரைந்து கருமத்தை முடிப்பின் அதனால் வரும் பெரும் பயன் நோக்கி. கள்ளைக் குடித்தவனுக்கு ஐம்பொறியும் சோம்பலின்றி விரைந்து நின்று செய்தல் இயற்கையாதல் போல, அரசனது பொருளை உண்பவனும் அவனது கருமத்தை விரைந்து நின்று முடித்தல் வேண்டும். அரசனால் ஏவப்பட்ட செயல் முடிவுறாது எஞ்ஞான்றும் சொல்லாதாகலின், 'மடித்து ஒழிதல்' என்றதற்குச் சோம்பல் கொண்டு விரைந்து செய்யா தொழிதல் என்று பொருள்கூறப்பட்டது.

'கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்' என்பது பழமொழி.

(1)

267. வெற்றிவேல் வேந்தன்வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலே மென்பது பேதைமையே - மற்றதனை
எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
செய்கென்றான் உண்கென்னு மாறு.

(சொ-ள்.) வெற்றிவேல் வேந்தன் - வெற்றி பொருந்திய வேலேந்திய அரசன், வியம் கொண்டால் - ஏவல் கொண்டால், யாம் ஒன்றும் பெற்றிலேம் - யாம் செயத்தகும் ஆற்றல் ஒரு சிறிதும் அடைந்தோமில்லையே, என்பது பேதைமையே - என்று கூறுவது அறியாமையேயாம், அதனை எவ்வம் இவராகி செய்க -