பக்கம் எண் :

192

அரசரால் மிக மதிக்கப்பட்டு விழுப் பயனை எய்துவார் என்பார், 'கடல்படா எல்லாம் படும்' என்றார்.

'கடல்படா எல்லாம் படும்' என்பது பழமொழி.

(4)

270. உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்
அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால்
வினைமுதிரின் செய்தான்மே லேறும் பனைமுதிரின்
தாய்தாள்மேல் வீழ்ந்து விடும்.

(சொ-ள்.)பனை முதிரின் - பனையினது பழம் முற்றின், தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும் - தாய்ப்பனையினது தாளின் மேலேயே வீழும்; (அதுபோல), உவப்ப - அரசன் தான் உவக்கும் படி, உடன்படுதற்கு - செய்து முடித்தற்கு, ஏய கருமம் - ஏவிய செயல்கள்.அவற்று அவற்று ஆம் துணைய பயத்தால் ஆகி - அவ்வச் செயல்களின் அளவாகிய பயனோடு, வினை முதிரின் - அச்செயல் முடியின், செய்தான்மேல் ஏறும் - அஃது ஏவியவனையன்றிச் செய்தவனையே சேரும்.

(க-து.)அரசன் ஏவிய கருமங்கள் பயன்பட முடிந்தால் அப்புகழ் செய்தவனையே சேரும்.

(வி-ம்.)முற்றிய பனம்பழம், தாய்ப்பனையின் தாளில் வீழ்தல்போல, வினையை முடித்தலான் வரும் புகழ் செய்தவனையே அடையுமென்பதாம்.சோழன் ஏவிய வினையை மேற்கொண்டு தொண்டைமான் கலிங்கம் எறிந்தானாயினும்,அப்புகழ் சோழன்மேற் செல்லாது தொண்டைமான்மேல்சென்றது போன்றதென்றறிக.

'பனைமுதிரின் தாய்தாள்மேல் வீழ்ந்துவிடும்'என்பது பழமொழி.

(5)

271. செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை யஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய்! கூரிது
எருத்து வலியநன் கொம்பு.

(சொ-ள்.)உருத்த சுணங்கின் ஒளி யிழாய் - தோன்றுகின்ற தேமலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடையாய்!,