பக்கம் எண் :

194

273. ஆண்டகை மன்னரைச் சார்ந்தார்தாம் அல்லுறினும்
ஆண்டொன்று வேண்டுதும் என்பது உரையற்க
பூண்டாங்கு மார்ப! பொருடக்கார் வேண்டாமை
வேண்டிய தெல்லாம் தரும்.

(சொ-ள்.) பூண் தாங்கும் மார்ப - அணிகலன்களை அணிந்திருக்கின்ற மார்பை உடையவனே!, ஆண்தகை மன்னரைச் சார்ந்தார் - ஆண்டகைமையை உடைய அரசர்களைச் சேர்ந்து ஒழுகுபவர்கள், தாம் அல் உறினும் - தாம் வறுமையால் மிக்க துன்பத்தை அடைந்தாலும், ஆண்டு - அவரிடத்தில், ஒன்று வேண்டுதும் என்பது - ஒன்றனை விரும்புகின்றோம் என்பதனை, உரையற்க - கூறாதொழிக, பொருள் தக்கார் - பிறரால் மிக மதிக்கப்பட்டார், வேண்டாமை - ஒரு பொருளையும் விரும்பிக் கேளாமையே, வேண்டியது எல்லாம் தரும் - அவர் விரும்பிய யாவற்றையும் தரும்ஆதலால்.

(க-து.) அரசனைச் சார்ந்தொழுகுவார் தமக்கு ஒரு பொருள் வேண்டுமென்று அரசனைக் கேளா தொழிகஎன்பதாம்.

(வி-ம்.) 'உரையற்க' என்றது, அரசனே குறிப்பறிந்து வேண்டியன ஈவான் என்பது கருதி. அரசர் அவர் குறிப்பினையறிந்து ஈயவேண்டுதலின், உரையற்க என்றதற்கு மனத்தால் நினையாதொழிக என்றல் பொருந்துமாறில்லை யென்க. அல்ல தூஉம் மனத்தால் நினைத்தலின் வரும் இழுக்கு ஒன்றில்லையாமாறறிக. அல்லுறினும் என்றது தொகுத்தல் விகாரம். வேண்டாமை என்றது ஈண்டு மொழியால் வேண்டாமையின்மேல் நின்றது.

'பொருள்தக்கார் வேண்டாமை வேண்டியதெல்லாந் தரும்' என்பது பழமொழி.

(8)

274. காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்
ஏவல் வினைசெய் திருந்தார்க் குதவடுத்தல்
ஆவணைய நின்றதன் கன்று முலையிருப்பத்
தாயணல் தான்சுவைத் தற்று.

(சொ-ள்.) காவலனை ஆக - அரசனைத் தனக்குத் துணையாகக் கொண்டு, வழிபட்டார் - அவனைச் சார்ந்தொழுகினார், அவன் ஏவல் வினை செய்திருந்தார்க்கு - அவனால் ஏவப்பட்ட வேலையைச் செய்பவர்க்கு, உதவு அடுத்தல் - உதவிசெய்து அவரால் காரியம் பெறலாமென்று நினைத்தல், ஆ - பசுவினை, அணைய