நின்ற - அணைந்து நின்ற, தன்கன்று - பசுவின் கன்று, முலையிருப்ப - தாயினது மடி யிருக்கவும, தாய் அணல் சுவைத் தற்று - தாயினது அணலைச் சுவைத்தாற்போலும். (க-து.) அரசனைச் சார்ந்தொழுகுவார் கீழாயினாரிடம் கூறித் தங்குறையை முடித்துக்கோடற்க என்பதாம். (வி-ம்.) அரசனைச் சார்ந்தொழுகுவார் அல்லுறினும் அவனிடம் உரையற்க என முன்னர் ஓதலின், அவன் ஏவல்செய்வாரிடத்தாவது கூறி முடித்துக் கோடலாமெனில், அதனால் பயன் பெறுதல் இன்று என்று மறுத்துக் கூறியது இது. வழிபட்டார் என்பது வழிப்பட்டார் என்றிருத்தல் வேண்டும்; அரசன்வழி நின்றொழுகுவார் எனப்பட்டு மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரத்திற் கேற்புடைமையான். கன்று மடியினை உண்ணாது அணலை உண்டு பயன்பெறாது ஒழிதல்போல, அவருங் காரியங்கோடல் இல்லை யென்பதாம். ஆவணைய என்பது இரண்டன் தொகை. 'தாயணல் தான்சுவைத் தற்று' என்பது பழமொழி. (9) 275. சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித் திறத்தின் உரைப்பார்க்கொன் றாகாத தில்லை விறற்புகழ் மன்னர்க் குயிரன்ன ரேனும் புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். (சொ-ள்.) விறல் புகழ் மன்னர்க்கு - மிகுந்த புகழினையுடைய அரசர்க்கு, உயிர் அன்னர் ஏனும் -உயிரை ஒப்பாரேயாயினும், புறத்து அமைச்சின் - புறத்தே உள்ள அமைச்சர்களைவிட, அகத்து கூன் நன்று - அரண்மனையிலுள்ள கூனர்க்குச் செவ்வி வாய்த்தல் எளிது (ஆதலால்), சிறப்புடை மன்னவரை - எல்லாச் சிறப்புமுடைய அரசர்களை, செவ்வியின் நோக்கி - காண்டற்குரிய காலத்தை அறிந்துகண்டு, திறத்தின் உரைப்பார்க்கு - திறம்படக் கூறுவார்க்கு, ஆகாதது ஒன்று இல்லை - முடியாததுஒன்றுமில்லை. (க-து.) அரசனை சார்ந்தொழுகுவார் அரசனுடைய குறிப்பறிந்து கூறிக் காரியங் கொள்கஎன்பதாம். (வி-ம்.) மேல் கீழோரிடத்துரைத்துக் காரியங்கொள்ளற்க என்றலின், அரசனுடைய குறிப்பறிந்து கூறி முடித்துக்கோடல் நல்லது என்றது இது. கூன் - கோயிலினுள் ஏவல்செய்வார். இவர்க்குச் செவ்வி மிக வாய்க்கும்; அமைச்சர்க்குச் செவ்வி
|