பக்கம் எண் :

198

(வி-ம்.) உம்மை விகாரத்தால் தொக்கது. இரண்டு எருதுகளிடைப் புக்கு உண்ண நினைத்த எருது, உண்ணவும் பெறாது அவற்றால் துன்புறுதல்போல,பயனடையா தொழிதலேயன்றித் தீமையும் உளவாம் என்பதாம்.

'எருத்திடை வைக்கோல் தினல்' என்பது பழமொழி.

(13)

279. பன்னாள் தொழில்செய் துடைய கவர்ந்துண்டார்
இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக் கொண்டு புகுதல் குவளையைத்
தன்னாரால் யாத்து விடல்.

(சொ-ள்.) பல் நாள் தொழில்செய்து உடைய கவர்ந்து உண்டார் - பல நாட்கள் ஊழியஞ்செய்து அரசனுடைய பொருள்களைப் பற்றி உண்டு மகிழ்ந்தவர்கள், இன்னாமை செய்யாமை வேண்டி - பின்னர் ஒருகாலத்தும் துன்பம் செய்யாதிருத்தலை விரும்பி, இறைவர்க்கு பொன்யாத்து கொண்டு புகுதல் - அரசனுக்குத் தம்மிடத்துள்ள பொன்னைக் கொடுத்து அன்பால் ஒழுகுதல், குவளையை தன் நாரால் யாத்துவிடல் - குவளைமலரை அவற்றின் தண்டினாலேயே கட்டுதலோ டொக்கும்.

(க-து.) அறிவுடையோர் அரசனிடத்துத் கொண்ட பொருளையே அவனிடத்துக் கொடுத்துத்தம்வயப்படுத்துவர்.

(வி-ம்.) நார் என்றது அதனையுடைய தண்டினை; பிறநாராற் கட்டுதற் கேலாது குவளையை அதன் நாராலேயே கட்டுதலைப்போல, அரசனிடத்துக்கொண்ட பொருளாலேயே அவனைவயப்படுத்துக.

'குவளையைத் தன்னாரால் யாத்து விடல்' என்பது பழமொழி.

(14)

280. மெய்ம்மையேநின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன்றார் குறைப்ப
தம்மேலே வீழப் பனை.

(சொ-ள்.) மெய்மையே நின்று - மெய்யான நெறியின் கண்ணே நின்று, மிக நோக்கப்பட்டவர் - அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர்கள், கை மேலேநின்று - தமக்கு ஒரு காரியம் முடியும்பொருட்டு அவராணை கடந்துநின்று, கறுப்பனசெய்தொழுகி -