பக்கம் எண் :

206

291. ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை யுடையாரும் கூற்றம்
புறங்கொம்மை கொட்டினா ரில்.

(சொ-ள்.) நோற்ற பெருமை உடையாரும்- தவம் ஆற்றியதா லுண்டாகும் பெருமையினை உடையவர்களும், கூற்றம் புறம் கொம்மை கொட்டினார் இல் - கூற்றத்தை அதன் பின்னே நின்று கைகளைக் குவித்துக் கொட்டி வலிய அழைத்தாரிலர், அரக்கன் போற்றாது கொண்டு போரில் அகப்பட்டான் - இராவணன் ஆராய்தலின்றி இராமனோடு பகை கொண்டு போரிடைப்பட்டு இறந்தொழிந்தான் (ஆதலால்), ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க - மிகவும் பெரியவர்களுடைய பகையினை விரும்பி மேற்கொள்ளா தொழிக.

(க-து.) அரசன் தன்னின் வலியாரிடத்துப் போர்செய்தல் ஒழிக என்பதாம்.

(வி-ம்.) உம்மை சிறப்பும்மை. கூற்றங் குதிக்கும் ஆற்றலுடையாரும் அது செய்வதிலர். இராவணன் வலிமையறியாது இறந்தான் என்று சான்று காட்டியவாறு. ஆதலின் கொள்ளற்க. 'கொம்மை கொட்டுதல்' - கை குவித்துக் கொட்டி விரைந்து அழைக்குங் குறிப்பு. கையைக் குவித்துக் கொட்டுதலாகிய இதுவே சிறுமியர் விளையாட்டாகிய கும்மி என்றாயது. நோற்றஎன்பது காரணப் பெயரெச்சம்.

'கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில்' என்பது பழமொழி.

(7)

292. பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண் டொழுகல் - வெறியொலி
கோநா யினம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு.

(சொ-ள்.) வெறி யொலி கோநாய் இனம் வெரூஉம் வெற்ப - வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சாநின்ற மலைநாட்டை யுடையவனே!, சிறியார் - வலியிற் சிறியவர்கள், பெரியாரைச் சார்ந்தார் மேல் - வலியாற் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடத்து, பேதைமை கந்தா (1) - அறியாமையையே பற்றுக்கோடாகக் கொண்டு, முரண் கொண்டு