பக்கம் எண் :

207

ஒழுகல் - மாறுபாடு கொண்டு ஒழுகற்க; (அது), தீ நாய் - தீய நாய், புலம்புகின் எண்கு எழுப்பும் - நாட்டின்கண் புகுந்தால் உறங்காநின்ற கரடியைஎழுப்புகின்றதை ஒக்கும்.

(க-து.) வலியாற் பெரியார்மீது மாறுபட்டு நிற்றலை ஒழிதலே யன்றி அவரைச் சார்ந்தார்மீதும் அங்ஙனமே யாகுக என்றது இது.

(வி-ம்.) வலியாற் பெரியார்க்குள்ளன அவரைச் சார்ந்தொழுகுவார்க்கு முண்மையின் அவரிடத்தும் மாறுபட்டு நிற்றலையொழிக என்பது. ஒழுகல் என்பது மகனெனல் என்றாற்போன்று எதிர்மறைப் பொருளில் நின்றது. தனக்கே தீங்கு விளைத்துக் கோடலின் தீ நாய் எனப்பட்டது. சிறியார் பெரியாரைச் சார்ந்தார் மீது மாறுபட்டு நிற்றல் தமக்குத் தாமே தீங்கினை விளைவித்துக்கொள்வதாக முடியும்.

'புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு' என்பது பழமொழி.

(8)

293. இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக சாவாதான்
முன்கை வளையுந் தொடும்.

(சொ-ள்.) இகலின் வலியாரை - போர் செய்தலில் வல்லமை உடையவர்களை, எள்ளி - இகழ்ந்து, எளியார் இகலின் எதிர் நிற்றல் ஏதம் - வலிமைகுன்றி நின்றோர் போரில் எதிர்த்து நிற்றல் அவருயிர்க்கு இன்னல் தருவதாம் (ஆதலின்), அகலப்போய் என்செய்தேயாயினும் உய்க - நெடுந்தொலைவிற் சென்று எத்தகைய சூழ்ச்சியைச் செய்தேயாயினும் உயிர் பிழைக்க; சாவாதான் முன்கை வளையுந் தொடும் - தப்பி உயிர்பிழைத் திருப்பவன் ஒருகால்அவர்களை வென்று தனது முன்கையில் கடகத்தையும் அணிந்துகொள்ளுவானாதலால்.

(க-து.) வலியாரோடு போர்செய்யத் துணிந்து நிற்றல் உயிருக்கு இறுதிபயப்ப தொன்றாம்.

(வி-ம்.) 'யாண்டுச்சென் றியாண்டு முளராகார்' என்றமையின் அகலப் போகிய விடத்தும் ஆராய்ந்து அறிந்து இறுதி விளைப்பர். ஆதலின் இன்னதென் றுரையாது என்செய்தேயாயினும் உய்ந்தீக என்றார். உயிர்பிழைத்திருப்பவன் அவர் மெலியராய காலத்து வென்று வாகுவலயம்பூணலாமாதலின்