பக்கம் எண் :

213

(சொ-ள்.) அ ஞான்று - முன்னொரு காலத்தில், வாள் திறலானை - நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை, வீட்டிய சென்றார் - கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர், வளைத்தார்கள் - வளைந்து சூழ்ந்தார்களாகி, விளங்கு ஒளி காட்ட - நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட, பொருவு அறு தன்மை கண்டு அஃது ஒழிந்தார் - ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள்; உருவு திரு ஊட்டுமாறு - அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி; அஃதால் - அதுவன்றோ?

(க-து.) உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.

(வி-ம்.) உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்பது பயப்ப வேறொரு பொருள் தந்து கூறலின், பிறிது மொழிதலாம். உருவு திரு வூட்டுதலாவது, கண்ட அளவிலேயே வெருண்டு மாறுகோடலை ஒழிதலான், தமது செல்வத்தை இடை யூறின்றித் துய்த்தலாம். வளைத்தார்கள் : முற்றெச்சம்.வளைத்தார்களாகிக் காட்டக்கண்டு ஒழிந்தார்எனக் கூட்டுக.

'உருவு திருவூட்டு மாறு' என்பது பழமொழி.

(17)

302. வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாங் கொள்யானைப் பூங்குன்ற நாட!
வலியலாந் தாக்கு வலிது.

(சொ-ள்.) புலி கலாம் கொள்யானை பூங்குன்ற நாட - புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே!, வலியாரை கண்டக்கால் - தம்மின் வலியாரைக் கண்டவிடத்து, வாய் வாளாராகி - வாயாலும் அடக்கமுடையராகி, மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை - தம்மின் மெலியாரிடத்து அடர்ந்து மிக்கு ஒழுகும் மேம்பாடுடைமை, வலியலாந்தாக்கு வலிது - வலியில்லாத காலத்து வலிமை உண்டாயினவாறு போலும்.

(க-து.) அரசன் தனக்கு மிக்க வலியில்லாத காலத்து வலியார்க்கு அஞ்சி மெலியார்மேல் மீதூர்ந்தொழுகுக என்றது இது.

(வி-ம்.) வலியார், மெலியார் என்புழி படை, பொருள், நீதி நூல்வழி யொழுகல் என்றிவை உடையாரும்,அவையில்லாரும்