என்பது கொள்ளப்படும். மிக்க வலியில்லாக் காலத்து வலியார்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கோடலும், மெலியாரை மீதூர்ந்து வலியுள தாக்கிக் கோடலும் தனக்கு வலிமையா மாதலின், 'வலியலாந் தாக்கு வலிது' என்றார். உம்மை தொக்கதுவிகாரம். 'வலியலாந் தாக்கு வலிது' என்பது பழமொழி. (18) 303. ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன் தன்னை எனைத்தும் வியவற்க - துன்னினார் நன்மை யிலராய் விடினும் நனிமலராம் பன்மையிற் பாடுடைய தில். (சொ-ள்.) ஒன்னார் அடநின்ற போழ்தின் - பொருந்தாதோர் போரிடத்தும் தம்மைக் கொல்லநின்றபொழுதில், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க - வீரத்தின்கண் மிக்கானாயினும் தனித்துநின்ற ஒருமகன் தன்னை எத்துணையும் வியந்து கூறாதொழிக, துன்னினார் நன்மையிலராய்விடிலும் - கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றார் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். நனிபலவாம் பன்மையில் பாடுடையது இல் - மிகப்பலராயிருத்தலைவிட வலிமையுடைய தொன்றில்லையாதலின். (க-து.) வீரமுடைமையினும் படைவலி வேண்டுமென்பது. (வி-ம்.) பாடு - ஈண்டு வலிமையாயிற்று. 'வியவற்க'என்றது தனித்துநின்று வியந்து கூறுதலாற் பயனில்லைஎன்பது அறிவித்தற்கு. 'நனிபலராம் பன்மையிற் பாடுடைய தில்' என்பது பழமொழி. (19) 304. தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப் பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம் வாய்முன்ன தாக வலிப்பினும் போகாதே நாய்பின்ன தாகத் தகர். (சொ-ள்.) என்னதும் வாய் முன்னதாக வலிப்பினும் - எத்துணை வருந்தி வாய் முன்னதாகும்படி கட்டியிழுத்தாலும், தகர் நாய் பின்னதாக போகாது - ஆடு நாய் தன் பின்னே வர, முன்னே போதல் இல்லை; (ஆதலால்), தன் நலிகிற்பான் தலைவரின் - தன்னை நலியவல்லவன் மீதூர்ந்து மேல்வரின், பின்
|