வயப்படுத்தும் பொருட்டுத் தன்னிலும் வலியால் மிக்கான் என்று கூறினான் என்றலுமாம். 'யானும் - இல்' வயப்படுத்தும் பொருட்டுக் கூறிய இன்சொற்கள். 'இடை நாய்' என்றதற்குப் பழைய பொழிப்புரையிலும் இடையர் நாய் என்றே கூறப்படுகின்றது. அது 'கிடைநாய்'என்றிருத்தல் வேண்டும். 'இடை நாயிற் கென்பிடு மாறு' என்பது பழமொழி. (21) 306. இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால் கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே சிறுகுரங்கின் கையாற் றுழா. (சொ-ள்.) இயற்பகை வெல்குறுவான் - இயல்பாக வுள்ள (தனது) பகையை வெல்ல நினைப்பவன், ஏமாப்ப - தனக்கு அரணாகுமாறு, முன்னே அயல்பகை தூண்டி விடுத்து - முன்னரே (தன் பகைக்கு) மற்றொருவனைப் பகைவனாகுமாறு தூண்டுதல் செய்து, ஓர் நயத்தால் - ஒரு நெறியால், கறுவழங்கி கைக்கு எளிதாய் செய்க - கோபத்தின்கண் மிக்கொழுகித் தன் கைக்கு எளிதாமாறு பகையை நெருக்குக, அது - அச் செயல், சிறு குரங்கின் கையால் துழா - பெரிய குரங்கு சிறிய குரங்கின் கையால் துழாவியசெயலை ஒக்கும். (க-து.) பகைவரை அவர்க்கு மாறாக மற்றொருவரை உண்டாக்கி வெல்க என்றது இது. (வி-ம்.) இயற்பகை என்றது, தொன்றுதொட்டுப் பகைமை மேற்கொண்டொழுகிய பகையாம். வெல்குறுவான் என்பது, எச்சமன்றிப் பெயராய் நின்றது. ஒரு நெறி யென்பது, ஆங்காலமறிந்து என்றவாறு : பெரிய குரங்கு சிறிய குரங்கின் உதவியால் அறிதல்போலத் தம் பகைவரை வேறொருவரின் உதவியால் அழிக்க எனஉபாயம் கூறியவாறு. 'சிறு குரங்கின் கையாற் றுழா' என்பது பழமொழி. (22) 307. மாற்றத்தை மாற்றும்உடைத்தலால் மற்றவர்க்கு ஆற்றும் பகையால் அவர்க்களைய - வேண்டுமே வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும். (சொ-ள்.) வேற்றுமை யார்க்கும் உண்டு ஆகலான் - மனவேறுபாடு எத்திறத்தார்க்கும் உண்டு ஆகலானும், மாற்றத்தை மாற்றம் உடைத்தலான் -
|