பக்கம் எண் :

222

பொதுவு ஆக்கல் வேண்டுமோ - அந்நோக்கினைப் பொதுவாக நோக்கினான் என்று கொள்ளல் வேண்டுமோ, யார் மேற்றா(க) கொள்ளினும் - அரசன் யார்மாட்டு அந் நோக்கினைக் கொண்டானாயினும், கொண்டு ஈக - தன்னை நோக்கினானாகக் கொள்க.

(க-து.) அரசன் குறிப்பினை அறிந்து ஆராய்தலின்றி போரிற்புகுதல் வீரர்களுடைய கடமையாம்.

(வி-ம்.) ஓட்டிலிடும் பயன் ஊரிலுள்ளார் மேற்றாயினவாறுபோல, முற்பட்டுச் செல்லின் வெற்றியால் வருஞ் சிறப்புச் சென்றார் மேற்றாகும். 'போர் ஏற்றும் என்பார்'என்றது,

'விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து' என்றலின்.

இதனால் வீரர் போரில் விருப்பமுடையராயிருத்தல்வேண்டும் என்பது அறியப்படும்.

'ஊர்மேற்றதா மமணர்க் கோடு' என்பது பழமொழி.

(4)

315. செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
சோரப் பொதியாத வாறு.

(சொ-ள்.) செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர் - தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள், தம்மேல் - தம்மீது, புகழ் பிறர் பாராட்ட - புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும்பொருட்டு, களிப்பினும் - களிப்புற்ற இடத்தும், தம் மேற்றுஆம் வீரஞ்சொல்லாமையே வீழ்க - தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக (அது), சோரம் பொதியாதவாறு - தன்னிடத்துள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும்.

(க-து.) வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம்.

(வி-ம்.) 'புகழ் :' இது முதனிலையே வினையெச்சமாய் நின்றது. 'பிறர்' என்றார், போரிடத்துத் தன்னைத்தான் சிறப்பித்துக் கூறுதல் அமையும் என்றற்கு. 'சோரப் பொதியாதவாறு' என்பது, சோரம் என்றிருத்தல் வேண்டும்.சோரம்