பக்கம் எண் :

225

319. காத்தாற்று கிற்பாரைக் கண்டால் எதிருரையார்
பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதூர்தல்
யாத்ததே சில்லார் படையாண்மை நாவிதன்வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல்.

(சொ-ள்.) காத்து ஆற்றுகிற்பாரை கண்டால் - தம்மைக் காத்துப் பகைவரோடு எதிராக நின்று உடற்றவல்லாரைக் கண்ட அளவில், எதிர் உரையார் - மாறு கூறுதலும் இலராகி, பார்த்து ஆற்றாதாரை - பார்த்த அளவில் ஆற்றாராகிப் புறங்கொடுத் தோடுவாரை, பரியாது மீது ஊர்தல் - இரங்குதலின்றி மேற்செல்லலான், யாத்த தேசு இல்லார் படையாண்மை - தனக்குளதாம் புகழினைப் பெறாதவர்கள் செய்யும் படையாண்மை, நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல் -அம்பட்டன் கத்தி சேப்பிலையை அறுக்கக் கூர்மைஉடையதாயினவாறு போலும்.

(க-து.) புறங்கொடுத்து ஓடுவார்மீதுபடை விடலாகாது என்றது இது.

(வி-ம்.) இறந்தது தழீஇய எச்ச உம்மைவிகாரத்தாற்றொக்கது. ஆற்றாதார்மீது மேற்சேறல்தேசு இல்லாமைக் கேதுவாயிற்று. யாத்த தேசுஎன்றது வீரர்கள் போர்செய்து வென்றியெய்தும்தொழிலராதலின் தமக்குளதாம் புகழினைப்புறங்கொடுத்தார்மீது மேற்சேறலான் அழித்துக்கோடலின் இல்லார் என்றார். அவர் எதிருரையாதுமீதூர்தல் நாவிதன் வாள் மயிர் வினைக்குப் பயன்படாதுசேப்பிலை யறுக்கப் பயன்பட்டாற்போலும்.

நாவிதன் வாள் சேப்பிலைக்குக்கூர்த்துவிடல் என்பது பழமொழி.

(9)

320. இஞ்சி அடைத்துவைத் தேமாந் திருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள்
இருளி னிருந்தும் வெளி.

(சொ-ள்.) இஞ்சி அடைத்துவைத்து ஏமாந்திருப்பினும் - மதில்வாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல்பெற்றுள்ளே யிருப்பினும், ஆற்றாதார் அஞ்சி அகப்படுவர் - போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர், அஞ்சி இருள் புக்கு இருப்பினும் - பயந்து இருளின்கண் புகுந்திருந்ததாயினும், புள் - பறவையானது, மெய்யே -உண்மையாகவே,