பக்கம் எண் :

226

இருளின் இருந்தும் வெளி வெரூஉம் - இருளினை உடைய இரவாக இருந்தும்வெளிச்சமுடைய பகலாக நினைத்து அஞ்சும்.

(க-து.) அஞ்சுவார்க்கு அரணாற் பயனுண்டாத லில்லை.

(வி-ம்.) ஏமம் + ஆர்ந்திருப்பினும் என்பது ஏமாந்திருப்பினும் எனத் தொக்கது. அஞ்சி என்றமையானும், 'வெய்யே' என்றதற்கொரு பொருட்சிறப் பின்மையான், 'மெய்யே' என்ற பாடம் கொள்ளப்பட்டது, மன உரம் இல்லாதார் அரண் முதலியன பெற்றும், பெற்றிலார் போலாம்.

'அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம் புள் இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி.

(10)

321. உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம்மிறைவன் கூழுண் பவரே
கருக்கினால் கூறைகொள் வார்.

(சொ-ள்.) உருத்து எழு ஞாட்பினுள் - சினந்து எழுந்த போரிடத்து, ஒன்னார் தொலைய செருக்கினால் செய்கல்லார் - பகைவர் அழியுமாறு வீரத்தாற் போர் செய்ய ஆற்றாராகி, செய்வாரே போல - செய்யும் ஆற்றலுடையாரைப் போல, தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவர் - தருக்கித் தம்மை மிகுத்துக் கூறுதலினால் தம் மரசனிடத்து உணவுபெற்று வாழ்கின்றவர்கள், கருக்கினால் கூறை கொள்வார் -மேனியழகால் ஆடையைப் பெறுகின்ற (ஆடல் வன்மை பெறாத)நாடகக் கணிகையரை ஒப்பர்.

(க-து.) ஆற்றலொரு சிறிதுமின்றி மிகுத்துக் கூறுதலானே உணவுபெறும் வீரர்கள் மேனியழகா லாடையைப் பெறும் கணிகையரை ஒப்பர்.

(வி-ம்.) கருக்கு என்பது நிறைவு; 'உணவு கருக்காயிருக்கின்றது' என்பது உலக வழக்கு.அஃது ஈண்டு மேனி நிறைவாகி அழகுக் காயிற்று.

'கருக்கினால் கூறைகொள் வார்' என்பது பழமொழி.

(11)

322. அமர்விலங்கி ஆற்றஅறியவும் பட்டார்
எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று
தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே
மகன்மறையாத் தாய்வாழு மாறு.