பக்கம் எண் :

227

(சொ-ள்.) அமர் விலங்கி ஆற்ற அறியவும் பட்டார் - போரிடை நின்று பகைவரைப் போர் செய்து நீக்கி மிகவும் எல்லோரானும் அறிந்துகொள்ளவும் பட்டார்கள், மேலை எமர் இன்னர் - முற்காலத்தில் எம் முன்னோர் இத்தன்மையரா யிருந்தனர், யார்க்கு உரைத்தும் - இவற்றை யாரிடத் துரைப்பேம், என்று - என்று கூறாமற்கூறி, தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அது - தம் முன்னோருடைய புகழ் மறைவினால் மறைந்து நின்று உணவு உண்டு செல்லுதலாகிய அது, மகன் மறையா தாய் வாழுமாறு - தான் பெற்ற மகனால் தனது அமையா ஒழுக்கத்தை மறைத்துக் கற்பமையா தாள் கணவனோடு வாழுமாற்றைஒக்கும்.

(க-து.) ஆற்றலில்லாத வீரர்கள் பழைமை பேசி உணவுபெறுதல் இகழத்தக்கதாம்.

(வி-ம்.) போர் வீரர்களுக்கு எல்லோராலும் அறியப்படுதல் சிறந்த தொன்றாகும். 'அறியவும் பட்டார்' என்புழி உம்மை மறைந்து வாழ்வார் அறியப்படுதலையே உயர்வாகக் கருதலின், உயர்வு சிறப்பாய் நின்று அவர் இழிவு விளக்கிற்று. 'தமர் மறையால்' யகர உடம்படு மெய் வந்தது. 'மகன் என்றமையால் தங்கணவனோடிருந்து பெற்ற குழந்தை என்பது பெறப்படும். மனையாள் என்னாது தாய்என்றார்,மகனுக்குத் தாயாதலேயன்றிக் கணவனுக்கு இல்லாளாதற்குரியஇயல்பு இல்லாதவளாதலின்.

'மகன் மறையாத் தாய் வாழுமாறு' என்பது பழமொழி.

(12)

323. உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை யாகாதாம் பேதை - தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி
அறிவச்சம் ஆற்றப் பெரிது.

(சொ-ள்.) பேதை - அறிவு இல்லாதவன், தறுகண் பொறிப்பட்டவாறு அல்லால் பூணாது - வெற்றி புண்ணியம் உண்டாய வழியல்லாது உண்டாகாது, என்று எண்ணி - என்று நினைத்து, அறிவு அச்சம் பெரிது - அறிவான் வரும் அச்சம் மிகுதியும் உடையவனாதலால், உறுகண் பலவும் - தனக்கு வந்துறும் துன்பங்களை, உணராமை - உணரத்தக்க அறிவின்மையை, கந்து (ஆக) - பற்றுக்கோடாகக் கொண்டுவரும், தறுகண்மை - அஞ்சாமை செய்தொழுகலின், ஆகாதாம் - தறுகண்மை உடையவனாக ஆக மாட்டான்.