31. பொற்பவும்பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார் சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ் அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும் பெரி(து)ஆள் பவனே பெரிது. (சொ-ள்.) வில் கீழ் அரிபாய்பரந்து அகன்ற கண்ணாய் - வில்லைப்போன்றபுருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும்அகன்ற கண்ணை உடையாய்!, பொற்பவும் - நன்மையையும், பொல்லாதனவும் -தீமையையும், புனைந்து - நிரல்படப் புனைந்து, இருந்தார் - மருங்கு இருந்தார், சொல்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ - சொற்களால் கூறவும்வேண்டுமோ?, பெரிது ஆள்பவனே பெரிது அறியும் - எல்லாவற்றையும்தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான். (க-து.) கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான். (வி-ம்.) சொல் பெய்து எனவே சொல்லுஞ் சொல்பயனின்றாய் முடியுமென்பதாம். 'பெரிது ஆள்பவனே பெரிதுஅறியும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி. (6) 32. பரந்த திறலாரைப்பாசிமேல் இட்டுக் கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்(து) எழுந்து வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய் விண்இயங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல். (சொ-ள்.) நிரந்து எழுந்து - நிரல்படஉயர்ந்து, வேயின் திரண்டதோள் - மூங்கில் போன்றதிரண்ட தோள்களையும், வேல் கண்ணாய் - வேல்போன்றகண்களையும் உடைய பெண்ணே!, விண் இயங்கும் ஞாயிற்றைகைமறைப்பார் இல் - வானிற் செல்லும் சூரியனைக் கையால்மறைப்பவர்கள் இல்லை (மறைக்க முடியாது.) (அதுபோல),பரந்த திறலாரை - மிகுந்த அறிவு ஆற்றல் உடையவர்களை,பாசிமேல் இட்டு - பாசியைப்போன்ற அடாத சிலசொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு, கரந்துமறைக்கலும் ஆமோ - அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? (மறைக்க முடியாது.) (க-து.) அறிவுடையார் புகழை மறைப்பின்மறைபடாது என்பதாம்.
|