பக்கம் எண் :

230

போர்ப்பறை அறைவித்து வலிமையுடைய தோள்களைப் பிசைந்து நின்றார்கள், காண்பாம் - உறுதியாக வெற்றியைக் காணுதலுறுவோம், இனிது அல்லால் வாழைக்காய் உப்பு உறைத்தல் இல் -இனிமையாக இருப்பதல்லாமல் எக்காலத்தும் வாழைக்காய்இயல்பாய் உவர்ப்போடு கூடி நிற்றல் இல்லையாதலான்.

(க-து.) அரசன் மகள் வேண்டினானாக, அவள் தமையன்மார் சினந்து போருக்குஎழுந்தனர்.

(வி-ம்.) இது மகண் மறுத்து மொழிதல் என்ற துறை இஃது அகப்புறத்தின்பாற்படும். வாழைக்காய் உப்புறைத்தல் இல்லையாதல் போல, மறக்குடியிற் பிறந்த நாம் மறந்தவிர்ந்தொழிதல் இல்லை; ஆதலால், உறுதியாக வெற்றியையே காண்போம் என்று போருக்கெழுந்த சில மறவர்கள் கூறியதாகக் கொள்க.

'வாழைக்காய் உப்புறைத்தல் இல்' என்பது பழமொழி.

(16)

30. இல்வாழ்க்கை

327. நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.

(சொ-ள்.) காரிகையாய் - அழகுடையாய்!, பெண்மை நாண் இன்றி ஆகாது - பெண்மைக்குணம் நாணின்றி உண்டாகாது; பேணுங்கால் - காப்பாற்றுமிடத்து, நயமிகு ஊண் இன்றி உயிர் வாழ்க்கை ஆகாது - நலம் மிகுந்த உணவு இல்லாது உயிர் வாழ்ந்திருத்தல் முடியாது; கருமங்கள் கைத்து இன்றி ஆகா - செயல்கள் கைப்பொருள் இல்லாது முடிதல் இல்லை; வித்து இன்றி சம்பிரதம் இல் - விதையின்றி விளைவும்இல்லை.

(க-து.) பெண்களுக்கு நாண் வேண்டும் என்றது இது.

(வி-ம்.) நாண், மகளிர் கற்பு முதலிய உயர்ந்த நிலையடைவதற்கு முதற்படியாயுள்ளது. இஃது இன்றேல் பெண்மைக்குணம் இன்றாம்.

'நாணமும் மடனும் நல்லோர்ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக