செல்வம் பெறுதற்கு ஏதுவாயிற்று. 'ஏமம் + ஆர்ந்திருந்தாரே' ஏமாந்திருந்தாரே எனத் தொக்கது. 'கடலுள் துலாம் பண்ணினார்' என்றது, கடல் நீரை இறைக்கப் புகுவார் நீர் குறைதல் இன்றி எஞ்ஞான்றும் பெறுதல்போல,எஞ்ஞான்றும் நீங்கா இன்பம் எய்துவர் என்பதாயிற்று. 'நாளும் கடலுள் துலாம் பண்ணினார்' என்பது பழமொழி. (4) 331. எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச் செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி மான்சேர்ந்த நோக்கினாய் ஆங்க வணங்காகும் தான்செய்த பாவை தனக்கு. (சொ-ள்.) மான் சேர்ந்த நோக்கினாய் - மானை யொத்த பார்வையை உடையாய்!, இறைவன் தன் மக்களை - தந்தை தன் குழந்தைகளை, எந் நெறியானும் - எல்லாவற்றானும், செம்மை நெறிமேல் நிற்க செயல் வேண்டும் - செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவு கொளுத்துதல் வேண்டும்; தான் செய்த பாவை தனக்கு அணங்காகும் - தன்னால் நிலைநிறுத்தப்பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும், அந்நெறி - செந்நெறியில் நிற்பச்செய்தல், ஆங்க - தெய்வமாந் தகுதியைப் போலாம்ஆதலான். (க-து.) மக்களுக்கு அறிவு ஊட்டுதல்தந்தை கடனாம். (வி-ம்.) செயல் வேண்டுமென்றார் அவர் கடமையாதலின். ‘ஆங்க' உவமச் சொல். கற்ற செந்நெறியில் நிற்பான் தந்தையால் போற்றப்படுவான்; தன்னால் நிலைநிறுத்தப்பட்ட பாவைதனக்குத் தெய்வமாய் அமைதல்போல. 'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது பழமொழி. (5) 332. ஒக்கும் வகையான் உடன்பொரும் சூதின்கண் பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும் மிக்க சிறப்பின ராயினும் தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு. (சொ-ள்.) ஒக்கும் வகையான் உடன் பொரும் சூதின் கண் - ஒக்கும்படி சிலருடன் கூடி விளையாடும் சூதாட்டிடத்து, பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும் -பக்கத்திலே
|