இருந்து ஒருவன் ஒருவனைச் சார்ந்து வேண்டியன கூறிக்கொடுப்பான்; (அதுபோல), மிக்க சிறப்பினராயினும் - மக்கள் எல்லோரும் மிகுந்த சிறப்புடையவராகக் கருதப்படுவாரேயாயினும், தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு - தாய்மார்களுக்கு மக்களுள்ளும் கல்வி யறிவான் மிக்காரிடத்து அன்பு தனிச் சிறப்புடையதாக இருக்கும். (க-து.) கல்வி யறிவான் மிக்க மக்களைத் தாயர் பெரிதும் விரும்புவர். (வி-ம்.) மிக்க அன்பு பாராட்டுவாள் என்பார், 'மக்களுள் பக்கமோ வேறு'என்றார். 'பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும்' என்பது புறம். குழந்தைகளில் வேறுபட்ட அன்பு கோடல்கூடாதாயினும், கல்வியறிவான் மிக்காரிடத்து மிக்க அன்பு செல்லுதல் இயற்கை என்பார், 'தாயர்க்கு'என்றார். 'தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு' என்பது பழமொழி. (6) 333. தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம் மடுத்தவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப நெறியல்ல சொல்லல்நீ பாண! அறிதுயில் ஆர்க்கும் எழுப்பல் அரிது. (சொ-ள்.) தொடி தோள் மடவார் மருமம் - தொடியணிந்த தோள்களையுடைய பரத்தையர் மார்பினை, தன் ஆகம் மடுத்து - தன் மார்பில் சேர்த்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப - அப்பரத்தையர் மார்பில் தலைவன் சேர, (நிகழ்த்திய தொன்றை) பாண நீ நெறியல்ல சொல்லல் - பாணனே! நீ இங்ஙனம் ஒழுகுதல் நெறியன்றென்று தலைவனிடத்துச் சொல்லுதலை ஒழிவாயாக; அறிதுயில் எழுப்பல் ஆர்க்கும் அரிது - பொய்த்துயிலினின்றும் ஒருவரை நீக்குதல் யாரானும் முடியாதாம். (க-து.) பாணனுக்குத் தலைமகள் வாயில்மறுத்துக் கூறியது. (வி-ம்.) தன் தோளிலுள்ள தொடி நெகிழ்ந்தமை தோன்றத் தொடித்தோள் என்றார். தொடி, மகளிர் தோளிற் கணியும் அணி - இது மகளிர் தோட்களைத் தொட்டுக்கொண்டு இறுகஇருத்தலின்,
|